கடந்த வாரம் ஞாயிறு அன்று(why செந்தமிழ்?)........போன வாரம் ஞாயித்துக் கிழமை, "மொழி" படம் பாத்தோம். அதான் நம்ம ஜோதிகா, பிரகாஷ் ராஜ், ப்ரித்திவிராஜ் நடிச்ச படம். ஜோதிகா கூட காது கேக்காத, வாய் பேசாத பொண்ணா கலக்கிருப்பாங்களே....ஆங்.....ஆங்......அதே தான், அந்த படமே தான். ஏன் பழைய படம் பாத்தோம்னா, இப்ப வர படங்கள் எல்லாம் foriegn locationல பாட்டு எடுக்கறாங்களோ, இல்லையோ, கட்டாயமா TASMAC கடைல படம் எடுக்கறாங்க. எங்கயாவது, பசங்களோட படம் பாக்க முடியுதா?அதனால தான் "மொழி" பாத்தோம். மிக அருமையான படம். குடும்பத்தோட சிரிச்சு மகிழ்ந்தோம். படம் முடிஞ்சு கொஞ்ச நேரம் sign languageல தான் பேசிண்டு இருந்தோம். Sunday இந்த படம் பாத்தோம்மா Monday அன்னிக்கு library போனேன். எனக்கு வேண்டிய bookஅ தேடி, தேடிப் பாத்தேன், கிடைக்கவே இல்லை. சரி, librarianஅ போய் கேப்போம்னு போய் வரிசைல நின்னாக்க.....அந்த librarian dumb & deaf. அந்த librarianக்கு ஒரு interpreter இருந்தா. நம்ம பேசறதை, sign languageல அந்த librarianக்கு translate பண்ணிண்டு இருந்தா. நான் ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கியே போனேன். என்னடா, நம்ம பாத்த படம் மாதிரியே இருக்கேனு ஒரு ஆச்சரியம், ஒரு மாற்றுத் திறனாளிக்கு வேலையும் கொடுத்து, ஒரு assistantயையும் கொடுத்துருக்காங்களேனு மற்றும் ஓர் ஆச்சரியம். என் turn வந்தது. நான் தேடிண்டு இருந்த book, "Eat, pray, love". நான் "eat" சொல்ல, அந்த intepreter, eat க்கு சைகை பண்ணி காமிச்சா. அதே மாதிரி , "pray" and "love"க்கு பண்ணி காமிச்சா. நான் சொல்லவும், அவங்க செய்யவும், ரொம்ப அழகா இருந்தது. எதுக்குனே தெரியாம கண்ணீர் எட்டிப் பாத்த்து. அந்த librarian நான் சொன்ன புத்தகத்தை தேடிக்க குடுத்தா. நமக்கு தான் sign languageல "Thank You"சொல்லத் தெரியுமே(Thanks to "Mozhi") சொல்லலாமானு, யோசிச்சேன். பயம்/தயக்கம் இருந்ததனால வாயால மட்டும் சொல்லிட்டு, கிளம்பிட்டேன். carல போய் ஏறி உக்காரர வரைக்கும், அந்த librarian, மொழி, sign language பத்திதான் யோசிச்சுண்டு இருந்தேன். கார் கிட்ட போய், கதவ திறந்து, புத்தகத்தை passenger seatல போட்டு, கதவ மூடி, சாவிய போட்டு, கார கிளப்பி, reverse gear போட்டா, காருக்குள் இருக்கும் MP3 CDயில் இருந்து, பாகவதம் உபன்யாசம் ஒலித்தது. "பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்....மொழிகளில் நான் மெளனமாய் இருக்கிறேன்.".......... ஒரு நொடிப் பொழுது, நான் மொத்தமும் அடங்கி, மெளனமானேன்.....ஹே கிருஷ்ணா, நான் என்ன படம் பாக்கறேனு கூட உனக்குத் தெரியுமா?
(The following is my view of 2 movies. Readers strictly cautioned.)
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாச்சு என் கதை. ஏதோ என்னவர் சினிமாக்கு போறேன்னா விட வேண்டியது தானே, தனியா போறாரே, துணைக்கு போவோம் நினைச்சதனால வந்தது வினை. அந்த சினிமா பேரே எனக்கு புரியலை. அப்புறம் எதுக்கு போவானேன். அதான் சும்மா கிடந்த சங்கு. என்ன சினிமா தெரியுமா....."Gravity". Earthல ஆரம்பிச்சு, spaceக்கு போவாங்கனு பாத்தா, ஆரம்பமே ஆகாயத்துல தான். Too much. ஒண்ணுயும் புரியலை. (Rather I didn't want to understand). எழுந்து போயிடலாம்னு பாத்தா, எழுந்து எங்க போறது, என்ன பண்றது?புரியுதோ புரியலையோ, குடுத்த காசுக்கு பாப்போம்னு பாத்தா, Sandra Bullockக்கு Claustrophobia வந்துதோ இல்லையோ, எனக்கு வந்துடுத்து. இது ஒண்ணும் வேலைக்கு ஆவறதில்லைனு, கண்ண மூடி தூங்கிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு கண்ண தொறந்து பாத்தா, Sandra Bullock இன்னும் spaceல தான் இருக்காங்க. ஏண்டிமா, நீ தரைல காலே வைக்க மாட்டயானு நான் நினைக்கறதுக்கும், அவங்க Earthஅ நோக்கி வரதுக்கும் சரியா இருந்தது. தரைல இறங்குவாங்கனு பாத்தா, ஏதோ ஒரு lakeக்குள்ள போயிட்டாங்க. அடங்கமாட்டேங்கறாங்களே. நிலத்தை பாப்போமா, இல்லையானு ஆயிடுத்து. இந்த படம் claustrophobia, இன்னொறு படம் Hydrophobia. ஊரெல்லாம் அந்த படத்தை பத்தி தான் பேச்சு. எல்லாரும் நல்லா இருக்குனு சொல்றாங்களே, நம்மளும் போய் தான் பாப்போமேனு போனோம். கெட்ட கேட்டுக்கு 3D வேற. படம் நல்லா இருந்ததுனு சொன்னா கூட போயிருக்க மாட்டோம். ஆனா படம் பாத்தவங்க எல்லாரும் அந்த படத்துல கடவுள் இருக்கார், கடவுள் இருக்கார்னு ஆஹா, ஓஹோனு சொன்னதால, கடவுள பாக்க "Life of Pi" க்கு போனோம். இரண்யகசிபுவோட மறு அவதாரம் மாதிரி, இந்த sceneல கடவுள் இருக்காரா, அந்த sceneல கடவுள் இருக்காரானு ஒவ்வொறு sceneலயும் கடவுள தேடிண்டு இருந்தேன். கடைசில எந்த sceneலயுமே கடவுள் (என்) கண்ணுக்கு தெரியலை. கதையும் கண்ணுக்கு தெரியலை. கார்த்தால ஆறது, ராத்திரி ஆறது, boat எங்கலாமோ போறது. ஆனா கதை மட்டும் எங்கயுமே போகலை. மொத்த படமும் தண்ணில. ஸ்...அப்பா.......பஞ்ச பூதங்கள்ல நிலத்துல படம் எடுத்துட்டாங்க, நீர்ல படம் எடுத்துட்டாங்க, ஆகாயத்துல படம் எடுத்துட்டாங்க. இன்னும் நெருப்பும், காற்றும் மட்டும் தான் பாக்கி. தெய்வமே!!!
(Did you read my another post When God is Answering, the solution is Simple)

No comments:
Post a Comment