தலைப்பைப் பார்த்துவிட்டு நான் என் புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் பற்றி எழுத போகிறேன் என்று நீங்கள் நினைத்தால்...அதற்கு நான் பொறுப்பல்ல👀 👀
நான் எழுதி கிழித்துவிட்டேன், அடுத்தது பேசிக் கிழிப்போம் என்று தீர்மானித்து, Toastmaster இல் சேர்ந்திருக்கிறேன். (எழுத்து - பிறந்த வீடு; பேச்சு - புகுந்த வீடு😎). டோஸ்ட்மாஸ்டரில் சேர வேறு ஒரு காரணமும் உள்ளது. எனக்குக் கோர்வையாக பேச வராது. அதுவும் தவிர, அடுத்த நிமிடம் உலகம் அழிந்துவிடுவது போல் வேக வேகமாக பேசுவேன். இது எல்லாவற்றையும் சரி செய்வதற்கு தான் Toastmaster இல் சேர்ந்திருக்கிறேன். Toastmaster இல் Prepared speeches and table topics(improptu speech) என்ற பகுதிகள் இருக்கிறது. அதில் table topics என்பது கொடுத்த தலைப்பிற்கு இரண்டு நிமிடங்களுக்குள் பேசவேண்டும். அதை ஓருவர் மதிப்பீடு செய்து நம் குறை நிறைகளை கூறுவர். ஆனால் நான் பேசுவதை மட்டும் மதிப்பீடு செய்யவே முடியாது. ஏனெனில் நான் தான் கண் இமைக்கும் நேரத்திற்குள் பேசி முடித்து விடுவேனே.... நான் என்ன பேசினேன் என்பதை அவர்களால் கிரஹிக்கக் கூட முடியாது. நானும் நிதானமாக பேச முயற்சிக்கிறேன் முடியவில்லை.
Prepared speechesஇல் முதல் speech ice breaker speech. என்னைப் பற்றி நான்கு நிமிடங்களிலிருந்து ஆறு நிமிடங்களுக்குள் பேச வேண்டும். பக் பக் இதயத்துடன் பேசி முடித்து விட்டேன். இரண்டாவது speechக்கு எதைப் பற்றி பேசுவது என்று தெரியாமல் திண்டாடி, கடைசியில் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த ஒன்றைப் பற்றி பேசினேன். அந்த மிகவும் மிகவும் மிகவும் பிடித்த ஒன்று.....காஃபி😍 ஐந்து நிமிடஙளிலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் பேச வேண்டும். அதே பக் பக் இதயத்துடன் பேசி முடித்து...பாராட்டுதல்களையும் பெற்றேன். அந்த பாராட்டில் மிக முக்கியமானது "we can tell you are a writer" என்று ஒருவர் சொன்னது. என் பேச்சைக் கேட்டு என்னை எழுத்தாளார் என்று அங்கீகரித்தது எனக்கு ஏனோ மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. மற்றபடி நான் பேசியது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது. என்னைப் பாராட்டியவர்களை நான் மதிக்க தவறியது போல் இருக்கும். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இது zoomஇல் நடைப்பெற்றதால் computerஐ பார்த்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
பிறந்த வீட்டைப் பற்றி பார்ப்போம். Amazon Kindleஇல் இதுவரை மூன்று புத்தகங்கள் பப்ளிஷ் செய்திருக்கிறேன்.
No comments:
Post a Comment