சிந்தயந்தி....

பல ஆண்டுகளுக்கு முன் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் ஒன்றில் "சிந்தயந்தி" என்ற இடைப் பெண்ணைப் பற்றி கூறினார்.  "சிந்தயந்தி" என்ற பேரின் மேல் காதல்
கொண்டு என் பெண்ணிற்கு "சிந்தயந்தி" என்று பெயரிட்டோம்.  இது நடந்து பன்னிரெண்டு வருடங்கள் முடிந்த நிலையில்,  கடந்த வாரத்தில் ஒரு நாள் திடீரென்று அந்த இடைக் குலப் பெண் "சிந்தயந்தி"  நினைவில் வந்தாள்.  அவள் கதையை நாம் எழுதக் கூடாது என்று தோன்றியது.  அந்த கதையை அரங்கேற்ற ஒரு களம் வேண்டுமல்லவா...."விகடகவி" என்ற பத்திரிக்கையை தொடர்பு கொண்டு, "சிந்தயந்தி" கதையை அவர்கள் பதிவிடுவார்களா என்று கேட்க, அவர்களும் சரி என்ற சொல்ல... இரண்டே இரண்டு நாட்களில் "சிந்தயந்தி"யை எழுதி முடிக்க வேண்டிய நிலை...பெரிய எழுத்தாளாராய் இருந்தால் இரண்டு நாட்களில் அழகாய் எழுதிவிடலாம்...  நானோ part-time எழுத்தாளார்....அதுவும் தவிர "சிந்தயந்தி"யைப் பற்றிய விவரம் முழுவதும் தெரியாது.  எப்படி எழுதப் போகிறோம்.... என்று மண்டையை உடைத்துக் கொண்டு googleலில் "சிந்தயந்தி"யைப் பற்றி தேடினால் ஒன்றும் ஒழுங்காய் கிடைக்கவில்லை.   என்னிடம் இருக்கும் புத்தகங்களிலும் "சிந்தயந்தி"யைப் பற்றி ஒன்றும் இல்லை...."திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை"என்பது போல் "கதையற்றவர்களுக்கு கண்ணன் துணை"என்று கண்ணின் காலில் விழுந்தது தான் தெரியும்....அதற்கு பிறகு அந்த கதை உருவானது....அதுவும் இரண்டு நாட்களில் உருவானதில் பெரும் பங்கு கண்ணனுக்கு......"Disney Land", "Universal Studio" வில் இருக்கும் ridesகளில் உட்கார்ந்தால்,  அந்த வண்டி நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து போய், பயத்தை காட்டி, உடலை நடுக்கம் கொள்ள செய்து விட்டு,  நம்மை மீண்டும் நம் உலகத்திற்கு கொண்டு வருவது போல், "கண்ணன்' என்ற வண்டி இரண்டு நாட்கள் என்னை ஆயர்பாடிக்கு அழைத்துச் சென்று, எல்லா இடங்களையும் காமித்து,  நான் கேட்டுக் கொண்டபடி "சிந்தயந்தி"யின் பக்தியைக் காண்பித்து  என்னை நிலைக்குலயச் செய்து, மீண்டும் என்னை என் உலக்த்திற்கு கொண்டு விட்டது.  என் வாழ்வின் மிகச் சிறந்த இரண்டு நாட்கள் அவை.....

மீண்டும் இது போல் "கண்ணன்" வண்டியில் பயணிக்க ஆசை....

சிந்தயந்தியைப் பற்றி படிக்க ஆசை இருப்பவர்கள் கீழே ப்ரொளன் நிற வண்ணத்தில் இருக்கும்
  சிந்தயந்தியைக் க்ளிக் செய்யவும்



1 comment:

  1. கதை அருமை தொடர்ந்து எழுதுங்கள்

    விஸ்வநாதன்

    ReplyDelete