வருவாய் வருவாய் வருவாய் கண்ணா

கிருஷ்ணர் இருக்காரே.....  நம்மால் கடைப்பிடிக்க முடியாத செயல்களை மட்டுமே கீதையில் கூறியிருக்கிறார்.   உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்...." கடமையைச் செய் பலனை எதிர்பாராதே " என்கிறார்.  அவர் கூற்றுப் படிப் பார்த்தால்....என் கடமை எழுதுவது மட்டுமே..... நான் எழுதியதை படிக்கிறார்களா இல்லையா என்ற பலனை நான் எதிர்பார்க்கக் கூடாது.  எப்படி எதிர்பார்க்காமல் இருக்க முடியும்.... யாருமே படிக்கவில்லை என்றால் நான் எழுதுவது எதற்காக....

இது கூட பரவாயில்லை...."உலகத்தில் உள்ள பசு, பட்சி, பூச்சி, மிருகம், மனிதன்....என எல்லா உயிரினிங்களுக்கு உள்ளே நான் இருப்பதால், எல்லாவற்றிலும் ...அவை எல்லாவற்றிலும் என்னையே பார்," என்கிறார்.......இது எங்கயாவது நடக்கக் கூடிய காரியமா?  சந்தோஷமாய் இருக்கும் தருணத்திலேயே  எல்லா உயிரினங்களுக்கு உள்ளேயும் கிருஷ்ணரைப் பார்ப்பது கடினம் என்றால், கோவம் தலைக்கு ஏறும் சமயத்தில் கிருஷ்ணரைப் பார்ப்பது என்பது......

இரண்டு நாட்களுக்கு முன்னால் எங்கயோ போய் விட்டு, வீட்டிற்கு  காரில் சென்றுக்
கொண்டிருக்கும் போது, ஒரு இடத்தில் "stop" sign போடப்பட்டிருந்தது.  அந்த stop signக்கு ஏற்றவாறு என் காரை முற்றிலுமாக நிறுத்திவிட்டு,  இரண்டு பக்கமும்  கார்கள் ஏதாவது வருகிறதா என்று பார்க்கையில், என்னுடைய இடது பக்கம் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.   அந்த கார் என்னைக் கடந்து போன பின் தான் நான் போக முடியும் என்ற விதிப்படி காத்துக் கொண்டிருக்கையில்,  என் பின்னாலிருந்த காரிலிருந்து பெரிய "ஹாங்" சத்தம்....சுறு சுறுவென கோபம்  மண்டைக்கு ஏறி வார்த்தைகள் மனதில் தெறித்தது...."அறிவிருக்காடா உனக்கு.....ஸ்டாப் சைன்ல நான் நிக்கறது உன் கண்ணுக்குத் தெரியல.....அந்த கார் மேல நான் போய் இடிச்சா நீயா insurance pay பண்ணுவ...மூளைய கழட்டி பேங்கல....."   அடடா.....எல்லா உயிர்களிடத்திலும் என்னைப் பார் என்று கிருஷ்ணர் சொல்லியிருக்காரே....இவனிடத்திலும் கிருஷ்ணர் இருப்பாரே....இவனை கன்னா பின்னாவென்று திட்டிவிட்டோமே....அதெல்லாம் கிருஷ்ணரை திட்டியது போன்றதா என்று மண்டையை உடைத்த படியே அந்த  ஸ்டாப் சைனிலிருந்து  புறப்பட்டு  வீடு வந்தடைந்தேன்.  காரைப் பார்க் பண்ணிய வினாடியில்,  மண்டை உடைப்பு நின்று ஒரு தெளிவு ஏற்பட்டது...."அவன் மனசுல கிருஷ்ணர் இருந்தார்னா அவன் லூசு மாதிரி ஹாங்க் அடிச்சிருப்பானா....அவன் மனசுல கண்ணன் இல்ல...அதனால அவன திட்டறதுல ஒண்ணும் தப்பே இல்ல...எங்க விட்டேன்...ஆ..ங்....மூளைய கழட்டி பேங்க்ல வச்சிட்டு வந்திருக்கயா....நீ டிரைவிங் கத்துக்கும் போது இதெல்லாம் யாரும் சொல்லித் தரலையா....சொல்லித் தந்திருப்பா...அடடா....மறந்து போயிட்டேனே...உன் மூளை தான் பாங்க்ல இருக்கே......(மற்ற வசவுகளை  என் image  கருதி இங்கே பதிவு செய்யவில்லை....) இந்த அமெரிக்கால எவ்ளோ ஸ்டாப் சைன் இருக்கு....எங்கயாவது ஒரு ஸ்டாப் சைன்ல நீ நிக்கும் போது உன் பின்னாடி பத்து இருவது கார் ஹாங் அடிச்சு.... நான் இன்னிக்கு பட்ட கஷ்ட்டத்த நீயும் படு....." சந்தோஷமாய் சாபம் கொடுத்தேன்.........அத்துடன் மனம் அடங்கியதா என்றால் இல்லை....மீண்டும் மீண்டும் இந்த சம்பவத்தை நினைவில் வந்து கொண்டிருந்தது.  வந்து கொண்டிருந்த வேளையில்  பொறி தட்டியது......அவன் மனதில் கிருஷ்ணர் இல்லை என்று திட்டினோமே......உண்மையில் நம் மனதில் தான் கிருஷ்ணர் இல்லை......இருந்திருந்தால் திட்டித் தீர்த்திருப்போமா.......இல்லை....இல்லை....எல்லோருக்குள்ளும் தான்  கிருஷ்ணர் இருக்கிறார்....அவரை உணர்ந்தவர்கள்  அமைதியாய் இருக்கிறார்கள்....அவரை உணராத  நான் அமைதியற்று இருக்கி....

"ஹே கண்ணா....அந்த காலத்தில் டீ.வியில் மகாபாரதம் பார்க்கும் போது ...."யதா யதா ஹி தர்மஸ்ய...." என்ற ஸ்லோகம் வரும்.   "எப்பொழுது எல்லாம் தர்மம் அழிகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்..." என்ற அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் தெரிந்தது... என் மனதில் இப்பொழுது தர்மம் அழிந்து விட்டது கண்ணா....கார் ஓட்டி வந்தவருக்கும் எனக்கும் ஒரு உறவும் இல்லை...ஒரு "ஹாங்" அடித்ததற்காக கண்டபடி பேசியிருக்கிறன்........உலக்த்தில் தர்மம் அழிந்தால் தான் உன்னைப் பிறப்பித்துக் கொள்வாயா? தர்மம் அழிந்த என் மனதில் உன்னைப் பிறப்பித்துக் கொள்ளமாட்டயா? "வருவாய் வருவாய் வருவாய் கண்ணா" என்ற பாரதியார் பாடல் தெரியுமா?  அந்த பாடலில்  "உருவாய் அறிவில் வளர்வாய் கண்ணா" என்று வரும்.  அறிவு என்று ஒன்று இருந்தால்....நான் பேசலாம்.. அதே பாடலில் "கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா" என்று வரும்.  குட்டிக் கண்ணனை வயிற்றில்
சுமக்க தகுதி இல்லாவிட்டாலும்,  ஆசை தான். ஆனால் அம்மா, அப்பாவாய் இருப்பது மிகுந்த கடினம் கண்ணா......கருவுற்ற காலம் தொடங்கு ஆயுள் முழுவதும் பெற்ற பிள்ளைகளைத்  பற்றிய சிந்தனை மட்டுமே மேலோங்கி இருக்கும்....பொறுப்புகள் நிறைந்த பதவி.  ஆதலால் என் கருவுள் நீ வர வேண்டாம்....என் மனதுள் வா கண்ணா.....உலகத்தில் உள்ள பசு, பட்சி, பூச்சி, மிருகம், மனிதன் என எதைப் பற்றியும் அதர்மமான சிந்தனை தோன்றும் போது, அதை அழித்து தர்மத்தை  நிலை நாட்ட வருவாய் வருவாய் வருவாய் கண்ணா....

1 comment:

  1. எண்ண ஓட்டம் (stream of consciousness) அருமை, எழுத்து ஓட்டமும் அருமை. பலன் prefer செய்வதும் expect செய்வதும் வேறுபட்டது. எதிர்பார்ப்பது is blind to complexities of the outcome, முன்னது அறிந்து செய்வது. பலன் கூடாவிடில் இரண்டுக்கும் வித்தியாசம் வெளிவரும்.. புத்தர் இவ்விதமான கருத்துக்களை பக்தி கலக்காமல் (secular) சற்று raw-வாக அலசியிருக்கிறார்...

    ReplyDelete