சமீபத்தில் வாட்ஸப்பில்.....வாட்ஸப்பில் ஒன்றும் வரவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை....அதனால் சும்மா வாட்ஸப்பை வம்பிற்கு இழுத்தேன்😎.
விஷயத்திற்கு வருகிறேன்....யார் யாரிடமோ இந்த கேள்வி கேட்க படுகிறது....என்னிடம் கேட்கப்படவில்லை... என்றேனும் ஒரு நாள் யாரேனும் அந்த கேள்வியைக் கேட்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன்....இது வரை யாரும் கேட்கவில்லை....வரும் நாட்களில்/மாதங்களில்/வருடங்களில் யாரேனும் கேட்கக்கூடும்....அதற்குள் எனக்கு அல்சைமர் வந்து, பதிலை மறந்து விட்டால்......அதனால்.....முந்திக் கொண்டு.... நானே கேள்வியையும் கேட்டு பதிலையும் அளிக்கிறேன்....
"பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும், பண்பிற்கும், அன்பிற்கும், அறிவிற்கும் பெயர் போன சுஜாதா அவர்களே......உலகத்தில் இருக்கும் ஒசைகளுள் தாங்களுக்கு பிடித்த ஓசை என்னவோ?"
"ம்ம்ம்ம்....எனக்கு பிடித்த ஓசை........
இந்த பதிவை அடிக்கும் போது வரும் கம்ப்யூட்டர் கீ போர்ட் ஒசையா - இல்லை.
டிக் டிக் என்று கடிகாரத்தின் ஓசையா - இல்லை.
கீ கீ என்று ஏதோ ஒரு பறவை கூவும் ஒசையா - இல்லை.
கோவில் மணி ஓசையா - இல்லை.
கோவில் மணி ஓசையா - இல்லை.
வாட்சப்பை திறக்கும் போது வரும் "கர்" ஒசைய - இல்லை.
மாடி வீட்டில் இருப்பவர்கள் நடக்கும் "தொம் தொம்" ஒசையா - இல்லை.
கீழ் வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் கொட்டும் ஓசையா - இல்லை.
எதிர்த்த வீட்டில் இருந்து வரும் குக்கர் ஒசையா - இல்லை.
வீட்டை சுத்தம் செய்யும் வாக்குவன் கிளீனரின் ஒசையா - இல்லை.
வெளியே விளையாடும் குழந்தைகளின் ஓசையா - இல்லை.
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை ஒசையா - இல்லை.
வாத்தியங்களின் ஓசையா - இல்லை.
சரக் சரக் என்று புத்தகத்தை திருப்பும் ஒசையா - இல்லை.
காய்ந்து கொண்டிருக்கும் பாலை கண்டு கொள்ளாமல் விட்டால் வரும் பொங்கும் ஒசையா - இல்லை.
விர் விர் என்ற வண்டிகளின் ஒசையா - இல்லை.
அருவியின் ஓசையா - இல்லை.
அலைகளின் ஓசையா - இல்லை.
அடை மழையின் ஒசையா - இல்லை.
அடை செய்யும் போது ஊற்றும் எண்ணெய்யின் ஒசையா - இல்லை.
ஒன்றொடன்று உரசி சத்தம் போடும் வளையல்களின் ஓசையா - இல்லை.
மெட்டி, கொலுசு அவைகளின் ஓசையா - இல்லை, இல்லை, இல்லை, இல்லை......
எனக்குப் பிடித்த அந்த ஓசை.......
கரண்ட் கட் ஏற்பட்டதால் தவித்துக் கொண்டிருக்கும் போது......
எதிர்பாராத நேரத்தில் மின்சாரத்திற்கு உயிர் வந்து .....
"டக டக" என்று மின் விசிறி மெல்ல சுழல ஆரம்பிக்கும் போது வரும் ஓசை இருக்கிறதே......
அந்த ஒசைக்கு ஈடு இணை வேறெதும் இல்லை.
ஒரு நாள் வாட்ஸப்பில் இந்த மின்விசிறி சுற்றும் ஓசையைப் பற்றி வரலாம்.....வராமலும் போகலாம். எப்படி முடிப்பது என்று தெரியவில்லை...அதனால் சும்மா வாட்ஸப்பை வம்பிற்கு இழுத்தேன்😎.
ட்விட்டரில் படித்ததாக ஞாபகம் ATMஇல் பணம் வரும் ஓசை Priceless
ReplyDeleteவிஸ்வநாதன்