பேட்ட

 பேட்ட கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி நாங்க பேட்ட பாத்த கதைய கேளுங்க....அடிச்சு பிடிச்சு சீக்கிரமே கிளம்பி போனா...தியேட்டர்ல பின்னாடி சீட்லாம் ஃபுல்.  சரி இருக்கற சீட்ல உக்காருவோம்னு உக்காந்தா...advt. ஓடிண்டு இருந்தது.   வீடியோ இல்ல.... (ப்ளாங்க் ஸ்க்ரீன்).. ஒன்லி ஆடியோ...டென்ஷன் ஆயிட்டேன்....படமும் வீடியோ இல்லாம ஆடியோ மட்டும் வரபோறதுனு.....ஒத்த பொம்பளையா கவுண்டர்க்கு ஓடி கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு(I fight for civil rights😀 ) திரும்பி வந்தா...படம் ஆரம்பிச்சுடுத்து...ப்ளாங்க் ஸ்க்ரீன் தான்....யாரெல்லாமோ டயலாக் பேசறாங்க....திரும்ப போய் கம்ப்ளெயிண்டு குடுக்கலாம்னு எழுந்தா....."வீழ்வேன் என்று நினைத்தாயா...." தலைவர் குரல் மட்டும் தான்....விஷூவல் இல்ல....ஆனாலும்....மேனி சிலிர்த்து, தலை சுற்றியே வேதனை செய்து......அப்பப்பா...அப்புறம் நாங்க எல்லாம் திரும்ப திரும்ப போய் கம்ப்ளெயிண்டு பண்ணி....ஆடியோ வீடியோவோட படம் இனிதே தொடங்கிற்று.

கார்த்திக் சுப்புராஜ்க்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்....கொஞ்ச காலமா காணாம போயிருந்த  ரஜினிய மீட்டு கொண்டு வந்துட்டார்.  படம் முழுக்க முழுக்க ரஜினி ரஜினி  நம்ம ரஜினி தான்....அவர் நடை என்ன, அழகு என்ன, ஸ்டைல் என்ன,  நடிப்பு என்ன, நக்கல் என்ன,  சிரிப்பு என்ன, காமெடி என்ன, ரொமென்ஸ் என்ன, dialogue delivery என்ன(நாதாரினு ஒரு இடத்துல சொல்லுவார்...அந்த நாதாரிங்கற  bad wordகூட...அவர் சொல்லும் போது அம்சமா இருந்தது😅)....ஐயய்யோ எனக்கு எழுத தெரியலையே....எழுத தெரியலையே.....எல்லாரும் என்னவோ vintage ரஜினிங்கறாங்க....என்ன கேட்டா no age ரஜினினு சொல்லுவேன்....அவருக்கு வயசு ஆன மாதிரியே தெரியல....இந்த வயசுல என்ன எனர்ஜி.....சுத்தி போடணும் அவருக்கு.... நிறைய இடத்துல பழைய ரஜினி ஞாபகம் வந்தது...first sceneல கதவு திறந்து வரும் போது "அபூர்வ ராகங்கள்" ரஜினி...."பாம்பு பாம்பு" நு முனிஸ்காந்த பயப்படுத்தும் போது "அண்ணாமலை  ரஜினி" ... ஹாஸ்டல் மாடில நடக்கற போதும், உள்ளே போனு சொல்ற போதும்...."பாட்ஷா ரஜினி"....first half முடிஞ்சதும்...திரும்ப ரிவைண்டு பண்ணி பாக்கணும் போல இருந்தது.....பாக்கதான போறேன் அந்த காளியோட ஆட்டத்தை திரும்ப....😁

சிம்ரனுக்கும், திர்ஷாக்கும் ஒண்ணும் வேலை இல்லை.  ரஜினி படத்துல நடிச்சுட்டோம்னு டிக் போட்டுக்கலாம் அவங்க...திர்ஷா சுத்தமா நடிக்கல.....டயலாக்க அப்படியே ஒப்பிச்சாங்க...ஆனா... சிம்ரன்.... சூப்பர்..சிம்ரனுக்கு ரஜினிக்கும் நடுவுல நடக்கும் ரொமென்ஸூம் சூப்பர்....கதா நாயகிகளை தொட்டு நடிக்காத தலைவர் சூப்பரோ சூப்பர்... அதுல பாருங்க நம்ம சிம்ரன் "உன்னை ஒன்று கேட்பேன்" ....அதான் நம்ம சரோஜா தேவி பாட்டு....அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடினாங்க..ரெண்டு மூணு  நிமிஷம் தான் இருக்கும்.....ஆனாலும் அந்த டான்ஸ்...செம்ம.... எக்ஸ்லெண்ட், மார்வெலஸ், எலிகெண்ட்.....சிம்ரன் ஜி வி மிஸ் யூ ஜி...திரும்ப ஆவோ ஜி....

அப்புறம் நம்ம விஜய் சேதுபதி...அவர தவிர அந்த காரெக்ட்டருக்கு யாரும் பொருத்தமா இருக்க முடியாது....அவர் நடிப்பெல்லாம் பத்தி நான் சொல்ல முடியுமா?  நடிப்பா, நிஜமானு பிரிச்சு பாக்கவே முடியாத மாறி நடிக்கும் நடிப்பு ராட்சசன்.....இதுலயும் அப்படியே தான்...ஆனாலும்....இந்த மாதிரி sidekickஆ நடிக்கறத என்னால் எத்துக்க முடியல.  "நானும் ரொளடி" தான் தனியா நின்னு ஆடறது தான் என் மனசுக்கு பிடிச்சுருக்கு. 

வில்லன் நடிகர் பெயர் தெரியல....ஆனா இன்னும் கொஞ்சம் கரடு முரடா இருந்திருக்கலாம்.... பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன், முனிஸ்காந்த, சசிகுமார், மகேந்திரன்...நிறைய நடிகர்கள்...அதுல சில பேர பாத்தா பொறாமையா இருந்தது😂நினைச்சு கூட பாத்துருப்பாங்களா ரஜியோட சேந்து நடிப்போம்னு? 

அனிருத் பிண்ணனி இசைல பின்னி பெடலெட்டுத்துட்டார்.  மரண மாஸ் தவிர வேற எந்த பாட்டும் மனசுல நிக்கல.....ஆனால்....படம் முழுக்க அங்கங்க அந்த கால பாட்டுகள் நிறைய வருது..."வந்த நாள் முதல் இந்த நாள் வரை", "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல", "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..." இது மாதிரி இன்னும் சில...ரொம்ப nostalgicஆ இருந்தது...ரஜினிக்கு அப்புறம் இந்த படத்துல எனக்கு பிடிச்சது இந்த பழைய பாடல்கள் தான்...

என்ன கேக்கறீங்க? படத்துல ஓட்டையா?  அது இருக்கு நிறைய....Who cares? ரஜினியின் பிரமாண்டத்துல எதுவுமே தெரியல. 


என்னோட bucket listல ரஜினியோட சினிமா ஒண்ணு first day first show போகணும்னு இருந்தது.  "பேட்ட" first day first show பாத்து அந்த ஆசைய நிறைவேத்திட்டேன்...அடுத்ததா...ரஜினி படம் பாக்கற அனுபவத்தை... American Audienceக்கு எழுதணும்னு ஆசை....என் ஆசை நிறைவேறுமா? பொருத்து இருந்து தான் பாக்கணும்...அதுக்கு முன்னாடி "பேட்ட" பாருங்க....👋👋

No comments:

Post a Comment