சர்க்கார்

சர்க்கார் படத்தின் Theme ஒரு விரல் புரட்சி....கட்டாயமாக நாமும் அந்த ஒரு விரல் புரட்சியை பின்பற்ற வேண்டும்.  ஒரு விரலைப் பயன்படுத்தி ரிமோட்டில் fast forwardஐ அழுத்தி இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.  தியேட்டரில் பார்த்தால் இரண்டு மணி நேரம் நொந்து நூடுல்ஸ் தான்.  ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா...அப்பபா......பெரிய பெரிய வசனங்கள்.......இந்த ட்விட்டர் காலத்தில் எதற்காக  lengthy dialouges?  அதுவும் ஒரு இடத்தில் தக்காளி பற்றி விஜய் பேசுவார் பாருங்கள்......தெய்வமே.......கள்ள ஒட்டு போடுவது தவறு என்பதில் தொடங்கி....(.அந்த trackஐயே தொடர்ந்திருந்தால் படம் நன்றாய் இருந்திருக்கும்.....) விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு மைக் பிடித்திருக்கிறது....கீர்த்தி சுரேஷும், யோகி பாவும் அநியாயத்திற்கு வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.  படத்தில் நன்றாய் இருப்பது  கோமளவல்லி கதாபாத்திரத்தில் வரும் வரலஷ்மி,  பாடல்கள், மற்றும் சண்டைக் காட்சிகள்.  வீட்டில் பார்க்கும் போது சண்டைக் காட்சிகளையும், பாடல்களையும் தான் fast forward செய்யத் தோன்றும்.  இந்த படத்தில் இவை இரண்டும் நன்றாய் அமைய, விஜய் வாயை திறந்தால்  fast forward செய்ய வேண்டும் போல் இருந்தது.  விஜய்க்கு அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ இல்லையே அடுத்த ரஜினிகாந்தாக வேண்டும் என்ற ஆசை கட்டாயமாக இருக்கிறது என்பதை சர்க்கார் சொல்கிறது.

இந்த படத்தில் வரும் கார் டிரைவர் சொல்வார்...."பிரச்சனைகளை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவோம், வாட்சப்புல போடுவோம்.  அடுத்த பிரச்சனை வந்தா இந்த பிரச்சனைய மறந்துடுவோம்...."  ஏன் ஃபேஸ்புக், வாட்ஸபோடு நிறுத்தி விட்டார்.....சர்க்காரிலும் அந்தப் பிரச்சனையை  உபயோகித்துக் கொண்டாரே டைரக்டர்...அவரும், கதாநாயகனும் கந்து வட்டியில் சிக்கினவர்களுக்கு உதவினார்களா? தெரியவில்லை..... அரசு மருத்துவமனையில் டெங்கு ஃபீவரால் பாதிக்கபட்டவர்களுக்கு சர்க்காரில் உதவுவது போல் நிஜத்தில் உதவினார்களா...   தெரியவில்லை...

நம்மால் ஜெயித்த அரசியல்வாதிகளுக் ஒன்றும் செய்வதில்லை....நம்மால்
கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிக நடிகையர்களும் ஒன்றும் செய்வதில்லை...  ....இந்த சர்க்கார் டிக்கெட்டின் விலை இரு மடங்காக இருக்கிறதே....அதை எதிர்த்து விஜய் ஏதாவது சொன்னாரா?  என் படத்தை விவசாயிகளும், கூலி வேலை செய்யும் மக்களும் பார்க்கவேண்டும்....டிக்கெட் விலையை உயர்த்தாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே.....விஜய் என்றில்லை....ரஜினியோ, கமலோ யாரும் சொல்ல மாட்டார்கள். 

இதற்காக எனக்கு விஜய் பிடிக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.  கில்லியும், பொக்கிரியும்,  நான் அடிக்கடி பார்க்கும் படங்கள்.  கத்தி படத்தைப் பார்த்து விட்டு உருகி உருகி விமர்சனம் எழுதினேன்.  இந்த படம் ஏனோ எனக்குக் கோவத்தை தந்தது.  திரும்ப திரும்ப எல்லா படத்திலும் தமிழ்  நாட்டில் இது சரியில்லை, அது சரியில்லை என்று கூறி வரும் விஜய், தமிழ் நாட்டிற்காக என்ன செய்தார்? 

இந்த படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ஒரு பெண்மணி தன் பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் சொன்னார், " காசு கொடுத்து தலைவலிய வாங்கிட்டோம்...."  I could not have said it better myself...

No comments:

Post a Comment