தீபாவளி சிறப்பு உரையாடல்

 நான் யாருடன் உரையாடினேன் என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  இந்த ஐந்து நிமிட வீடியோவிற்கு நான் செலவழித்தது மூன்று மணி நேரம்.  இந்த அழகில் எழுதுவதை விட்டுவிட்டு வீடியோவே செய்யலாமா என்று ஒரு யோசனை.   எழுதுவது மிகவும் கடினம்.  நேரம் காலம் இல்லாமல் தோன்றும் எண்ணங்களை நினைவில் வைத்துக் கொண்டு, எழுதுவதற்காக கம்ப்யூட்டரை திறந்தால், அந்த எண்ணங்கள் போன இடம் தெரியாது.  ஆனால் வீடியோவில் (on the sopt)பேசுவது சுலபமாக இருந்தது.   சுலபமாக இருந்தாலும் வீடியோவிற்கு என்று சில வேலைகள் செய்ய வேண்டும்.  இந்த வீடியோவில் கூட,technicalஆக சில திருத்தங்கள் செய்திருக்கலாம்.  அதற்கு  நேரம் இல்லை.  ஏனெனில் இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி.  இனிமேல் தான் ஜெயஶ்ரீ கிச்சனோ, ராக்ஸ் கிச்சனோ, சுப்புஸ் கிச்சனோ ஏதோ ஒரு கிச்சனுக்குமள் நுழைந்து பார்த்து பலகாரங்கள் செய்ய வேண்டும்.  ஆதலினால்......வேறு ஒன்றும் இல்லை.  உங்கள் வீட்டில் எல்லோரும் நலம் தானே?

இந்த வீடியோவை கண்டு  _______________(கோடிட்ட இடத்தை  வீடியோவைப் பார்த்த பின்  நிரப்புங்கள்)

1 comment:

  1. Nee semma di Suja...concept semma... Nee super cute... Naragasuranum nanraga pesinar.. by the way u can refer padhus kitchen also :)

    ReplyDelete