பிக்பாஸில் திருக்குறள்

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் லட்சக் கணக்கான மக்கள் ஒரு புறம் இதைப் பற்றி எல்லா இடத்திலும் (தமிழ் நாட்டில்) பேசிக் கொண்டிருக்கு, மறுபுறம் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களும் எல்லா இடத்திலும் (தமிழ் நாட்டில்) இந்த நிகழ்ச்சசியை வாயில் வந்தபடி வைது கொண்டிருக்கிறார்கள்.  நானும் "ஓவியா" என்ற ஒவியம் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் வரை விடாப்பிடியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவர் விட்டு விட்டுச் சென்றதும் ஸ்ருதி இறங்கிப் போய் பார்ப்பதை நிறுத்திக் கொண்டேன்.  திரு. கமல்ஹாஸன் தோன்றும் சனியும், ஞாயிறும் fast forward செய்து கொண்டே பார்ப்பதுண்டு.  ஆனால் இந்த பிக்பாஸ் கற்றுக் கொடுத்த பாடம் அனேகம்.  ஒரு மனிதன் எப்படி இருக்கக் கூடாது, என்ன பேசக் கூடாது,  முக்கியமாக புறம் பேசுவது எவ்வளவு தவறு என்பதை இந்த பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் ப்ரபலங்கள் அவர்கள் செயலால் நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.  இது இவ்வாறு இருக்க எதற்கோ திருக்குறளை நான் தேடிப் போக, அதில் இருந்த குறள்கள் சில நம் பிக்காஸில் பங்கேற்றவர்களுக்குப் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதின் விளைவு இந்த பதிவு.



காயத்ரி:  இன்று தமிழ் மக்களால் அதிகம் திட்டப் படுபவர் இவர் தான்.  ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இவரின் பதிவுகளுக்கு வரும் காமெண்ட்டுகளைப் படித்தால்.....நமக்கு தலையைச் சுற்றும். அனைத்தும் வசவு மொழிகள் தான்.  இவருக்கு மட்டும் வசவு இல்லை, இவரைப் பரிந்து யாரேனும் பேசினால் அவருக்கும் திட்டு தான்.  இவை அனைத்துக்கும் காரணம் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது எல்லாரையும் வார்த்தையால் பந்தாடியது தான்.  முக்கியமாக ஓவியாவை கன்னா பின்னாவென்று பேசியது தான்.  இந்த காயத்ரி கோவத்தில் கொந்தளித்து, தாறுமாறாய் பேசியதை நானும் பார்த்தேன்.  அதிர்ந்தேன்.  அவர் பேசியதை எதிர்த்து அந்த வீட்டில் இருந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.  திரு. கமல் அவர்களும் (காயத்ரியை எதிர்த்த மக்களின் கோபத்தை தாங்க முடியாமல்) காயத்ரியை கோவித்துக் கொண்டார்.  அப்பொழுதும் காயத்ரி "கோவமும்,  தவறான வார்த்தை பேசுவதும் என் இயல்பு" என்று சொன்னாரே தவிர, தன்னை திருத்திக் கொள்ள முன் வரவில்லை.  அன்று அவர் சொன்ன தகாத வார்த்தைகள் அனைத்தும் இன்று அவருக்கு வட்டியோடு திரும்ப கிடைத்துக் கொண்டிருக்கின்றன.  இவருக்கு பொருந்தும் திருக்குறள்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(Whatever besides you leave unguarded, guard your tongue. Otherwise, errors of speech and the consequent misery will ensue)


சக்தி:   காயத்ரியின் உற்ற நண்பர்.  காயத்ரி செய்த அனைத்து தவறுகளுக்கும் துணை போனவர்.  ஆனால் ஆரம்பத்தில் சக்தி நல்ல மனிதராய், நல்ல பண்புகளுடன் இருந்தார்.  மக்களுக்கும் அவரைப் பிடித்து தான் இருந்தது.  காயத்ரியோடு சேர்ந்த பின், காயத்ரியை திருத்தாமல், அவரோடு சேர்ந்து சக்தியும் மற்றுமொரு காயத்ரியாக மாறிவிட்டார்.  காயத்ரியைப் போல் வார்த்தைகளை விடவில்லை என்றாலும், சக்தி செய்த செயல்கள் மக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.  மக்களின் மனதில் அவருக்கு இருந்த மதிப்பும் போய் விட்டது.  இவருக்கு உண்டான திருக்குறள்:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்.


(A man's deeds are the touchstone of his greatness and littleness).

ஜூலி :  இன்று தமிழ் மக்களால் 
அதிகம் வெறுக்கப் படுபவர் இவராக தான் இருக்கும்.  ஜல்லிக் கட்டில் கிடைத்த நல்ல பெயரை பிக்பாஸில் தொலைத்து விட்டார்.  அவ்வபொழுது நடித்து ஏமாற்றியதை பொருத்துக் கொண்டாலும்,  அடுத்து ஜூலி செய்த தகாத செயலால் மக்கள் வெகுண்டு எழுந்தனர்.  ஜீலி மனம் உடைந்த நேரத்தில் அந்த வீட்டில் இருப்பவர்கள் யாருமே அவருக்கு ஆறுதல் சொல்ல முற்படாதபோது ஓவியா ஒருவர் மட்டுமே ஜீலிக்கு ஆறுதல் கூறினார்.  ஆனால் ஜல்லிக் கட்டுப் பெண் அந்த ஆறுதல் வார்த்தைகளை திரித்து ஓவியாவைப் பற்றி தப்பாய் மற்றவர்களிடம் கூறி ஒவியாவை அனைவரும் (மேலும்) வெறுப்பதற்கு காரணமாகிவிட்டார்.  இவருக்கு உண்டான திருக்குறள்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்.


(If a man/woman inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening)

வையாபுரி:  " வையாபுரி அண்ணா" என்று பிக் பாஸ் வீட்டில் இருப்பவரால் மரியாதையோடு அழைக்ப்படுபவர்.  அவரும் மிக மரியாதையாக இருந்தார்.  தன்னால் இயன்ற வரை  பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.  ஆனாலும் நாள் செல்ல செல்ல அவருக்கும் வேண்டாதவர்களின் காற்று பட்டுவிட்டது போல. அவ்வப்பொழுது அவர் பேசுவதும் நன்றாக இருப்பது இல்லை.  மக்கள் அவருக்கு மதிப்பு கொடுத்து வைத்திருந்தார்கள். சில வேண்டாத பேச்சுகளால் தன் மதிப்பை இழந்து வருகிறார். 

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.


(If the good speak vain words their eminence and excellence will leave them).

ஆரவ்:  ஒவியா மனதை மட்டும் அல்ல, மக்கள் மனதையும் கவர்ந்திருந்தார்.  ஓவியா தன் காதலை தெரிவித்த பொழுது அதை மறுக்காமல் அவருடன் சிரித்து பேசி, காதல் இருப்பது போல் ஒரு மாயயை உருவாக்கிவிட்டி கடைசியில் காதல் இல்லை என்று கவுத்து விட்டார்.  கவுத்தது மட்டும் அல்ல, மற்ற பெண்களிடம் ஒவியாவைப் பற்றியும் தப்பாக பேசிவிட்டார்.  சீட்டு கட்டு கட்டிடம் விழுந்து நொறுங்கியது போல் இவர் மேல் உள்ள மதிப்பும் பறந்து போய் விட்டது.  இவருக்கு உண்டான திருக்குறள்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை.


To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

கமல்ஹாசன்:   ஓவியா தவறு  செய்த பொழுதும், ஜீலி தவறு செய்த பொழுதும் கேள்வி எழுப்பியவர் காயத்ரி தகாத வார்த்தைகளாக உ
திர்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கேள்வியும் கேட்கவில்லை உலக நாயகன். அது ஏன் என்று பலர் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் இல்லை.   ஒரே ஒரு முறை போனால் போகிறது என்று ஒரு முறை கேள்வி கேட்டு விட்டு விட்டார். காயத்ரியை முதலிலேயே தண்டித்து இருந்தால், இன்று ஒரு வேளை திருந்தியிருக்கலாம்.   ஒரு பொறுப்பான இடத்தில் இருப்பவர் தனக்கு கீழ் யார் தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்கும் குணத்தை உடையவராக இருக்க வேண்டும்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.


He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.


ஓவியா:  இவரை நினைத்தாலே புன்னகை வந்து ஒட்டிக் கொள்கிறது.  நாம் எப்படி இருக்க வேண்டும் என்று இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.  யார் என்ன சொன்னாலும்...அது காயப்படுத்தும் சொல்லே ஆனாலும் கண்டு கொள்ளமாட்டார்.  இவரைப் பற்றி மற்றவர்கள் புறம் பேசிக் கொண்டிருக்க  இவர் யாரையும் பற்றி ஒரு வார்த்தைக் கூட புறம் பேசியது கிடையாது.  எப்பொழுதும் சிரிப்பு, எப்பொழுதும் சந்தோஷம். "ஓவியா, ஓவியா" என்று  மக்கள் உருகுவதற்கு   இவரது குணம் தான் முக்கிய காரணம்.   

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன்.


He/She who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men/women.

பிக் பாஸ் scripted ஆ இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை.  நான் விரும்பவது ஒன்றே....ஓவியாவைப் போல் யார் விஷயத்திலும் தடையிடாமல், புறம் கூறாமல், முடிந்த வரையில் சிரித்துக் கொண்டு, மற்றவர்களையும் சிரிக்க வைத்து வாழவேண்டும். அப்படி நீங்களும் வாழ்ந்தால்....உங்களை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. நீங்கள் தான் பிக் பாஸ்!   


No comments:

Post a Comment