சென்றேன் கண்டேன் வந்தேன்

"மண்ணே போய் வரவா" அப்படினு சோக கீதம்  எழுதலாம்னு தான் நினைச்சேன்.  எனக்கு உண்டான சோகம் அது தன்னால ஆறிடும். ஆனா என்னோட சோகம் உங்களை தாக்கும்னு நினைக்கும்போது, வந்த கீதம் நின்னுடுத்து.  அதனால ஜாலி tourஆ, நான் அனுபவித்த "chennai"ய உங்களோட share பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  சும்மா படிங்க மக்களே, bore அடிக்கமாட்டேன்!
Duchess All Women Car Rally: Out of the blue, என்னோட அக்கா எங்கிட்ட வந்து, "சுஜா, Rallyக்கு வரயா?" அப்படினு கேட்டப்போ, அதுல இருக்கற வில்லங்கம் தெரியாம, "அதுக்கு என்ன வந்தா போச்சு" அப்படினு பெரிய மனசு பண்ணி o.k. சொல்லிடேன்.  அதுக்கு அப்புறம் தான் அக்கா ஒரு குண்ட தூக்கி போட்டா.  "நான் drive பண்றேன், "N" navigate பண்னுவா, "R" landmarks mark பண்னுவா, நீ calculate பண்ணனும்".  என்னது,என்னது calculateஆ, அதுவும் distance,speed, time. "அம்மா தாயே, நான் M.sc. Maths fail, எனக்கு கணக்குலாம் போட தெரியாது, ஆள விடு" அப்படினு நான் கெஞ்சி கேட்டும் என்ன அவ விடலை.  வேற வழி இல்லாம Calculate பண்ண ஒத்துண்டேன்.  ஒண்ணு நாம படிச்சுருக்கணும், இல்ல நல்லா படிச்சவர கல்யாணம் பண்ணிக்கனும்.  அதனால ராவோட ராவா நல்லா படிச்ச"அவர்" கஷ்ட்டப்பட்டு, திண்டாடி, அந்த  calculationஅ கத்து குடுத்தார்.  இதுல 4 participants  வேலையும் கொஞ்ஜம் tension தான்.  முதல்ல Driver. Savera Hotelலேந்து ஆரம்பிக்கணும்.  அது ஒண்ணு தான் known point.  Destination தெரியாது.  அதனால Drive பண்றவா, Navigator சொல்றத காதுல வாங்கிண்டு, இருக்கற tensionல, left திரும்புனா, rightல திரும்பாம இருக்கணும். Second Navigator.  Navigation Chart ஒண்ணு குடுப்பா.  அத பாத்து Navigator, should guide  the driver. "rightல திரும்பி leftல cut பண்ணு, நாலாவது signalஆண்ட rightல வலி", அப்படினுலாம் easyயா இருக்காது.  Chart fullஆ dots & arrows தான்  இருக்கும். dot - நம்ப, Arrow - car. அத decipher பண்ணி correctஆ வழி சொல்லணும்.  Third LandMarker.  landmarks mark பண்றதும் கொஞ்சம் கடி தான்.  அதுக்கும் ஒரு chart குடுக்கறா. அதுல rally routeல இருக்கற  any 20 offices/buildings/shops etc.,  பத்தி புட்டு புட்டு வைக்காம, சூசகமா questions இருக்கும். இத்தனாவது kilometerல ஒரு building இருக்கு, அந்த building பேர் என்ன, அப்படிங்ற கேள்விக்கு நம்ம correctஆ answer எழுதணும்.  இல்லாட்டா point loose பண்ணிடுவோம்.  For instance, "Lord Murugan is eating on the right at about 6kms" அப்படினு இருக்கும்.  அதுக்கு அஞ்சாவது கிலோமீட்டர்லேந்தே முருகன் எங்க இருக்கார்னு பாத்துண்டே வரணும்.  ஆறாவது கிலோமீட்டர் கிட்ட வரும்போது  rightல "Hotel Saravana Bhavan" இருக்கும்.  அது தான்  Answer. இந்த மாதிரி எல்லா indirect questionsக்கும் correctஆ  answer பண்ணனும்.  Finally, calculation. அதுக்கும் ஒரு Chart உண்டு.  அதுல குடுத்து இருக்கற time and distance வச்சு, minute by minute speed calculate பண்ணனும்.  Really speaking, இந்த 4 விஷயமும் பெரிய matterஏ இல்ல.  அஞ்சாவதா ஒண்ணு இருக்கு.  அது மட்டும் தெரியலை, rally போறதே waste.  அது என்னனா….. சிரிக்கத் தெரியணும். வயத்த வலிக்க சிரிக்க தெரியணும்.  திருவள்ளுவர் சொன்னாரே"இடுக்கண் வருங்கால் நகுக", அத இங்க follow பண்ணனும்.  carல இருக்கற நாலு பேருக்கும் relationshipஏ breakஆற அளவுக்கு சண்ட வரும்.  அத ரொம்ப seriousஆ எடுத்துக்காம, நம்ம பண்ற சொதப்பல பாத்து விழுந்து விழுந்து சிரிக்கத் தெரியனும்.  அதனால சிரிக்கத் தெரிந்த மக்கள் யாராக இருந்தாலும், இந்த rallyல pariticipate பண்ணலாம்.  I thank my sister for reeling me in otherwise I would've missed all the fun. And third prizeல எங்க பேர் எழுதிருந்தது.

Dakshin Chitra:   Dakshin Chitra is a Heritage Village. அதாவது தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா & கர்நாடகா மாநிலங்களோட  பாரம்பரிய வீடுகள், அதுல அந்த காலத்து மக்கள் use பண்ண பொருட்கள் எல்லாம் பழமை மாறாம அப்படியே உருவாக்கி  நம்ம பார்வைக்காக வைச்சுருக்காங்க (I ctrl C +ctrl  V'd the above lines from some other website). முதல் தடவை  Dakshin Chitra  பேர கேட்டதும் ஏதோ South Indian Restaurant  போல இருக்குனு நினைச்சேன்.  ஆனா Dakshin Chitra உள்ள போனதும் அசந்து போயிட்டேன்.   கேரளா வீடுகள் எடுத்துண்டானா,  Brahmin வீடு, Muslim வீடு, Christian வீடுனு
வித விதமா வீடுகள்.  ஒரு வீடு மாதிரி அடுத்த வீடு இல்ல. வீட்டு plan, architecture எல்லாமே வேற. Surprisingly, one of the houses had Ravi Varma's paintings.  கேரளாலேந்து அப்படியே நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தோம்.  தமிழ்நாட்லையும் வித விதமா வீடுகள். அக்ரஹாரத்து வீடு, குயவர் வீடு, நெசவாளர் வீடு…..அய்யனார் சிலை, குதிரை…நிறையை இருக்கு.   பேசிண்டே ஒரு வீட்டுக்குள்ள போனா…….My heart skipped a beat.  அந்த வீடு அப்படியே அந்த கால கிராமத்து வீடு மாதிரி இருந்தது.  வெளில பெரிய திண்ணை.  திண்ணைய தாண்டி தலைய குனிஞ்சு(வாசப்படி இடிக்கும்) உள்ள போனா, இரண்டு பக்கமும் பெரிய தாழ்வாரம். Right side தாழ்வாரம் connects to a கூடம்.  அந்த கூடத்துல தூளி, தொட்டில், கட்டில், ஊஞ்சல் இருக்கு.  கூடத்திலேந்து அப்படியே rightல சமையல் அறை.  அதுல கல்லுரல், அம்மி, இயந்திரம் எல்லாம் இருக்கு.  சமையல் அறைக்கு அப்புறம் rightல உள்ள போனா கொல்லை(backyard).  உள்ள போகாம நேர வந்தா ஒரு அறை.  அந்த அறை connects to left side தாழ்வாரம்.  இந்த circleக்கு நடுல திறந்த வெளி முற்றம்.  ரொம்ப அருமையா இருந்தது அந்த வீடு.  இந்த மாதிரி வீட்டுல நம்ம உற்றார், உறவினர், குழந்தைகள் எல்லாரோடையும் சேந்து இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்.  எப்பவும் வேணாம்.  atleast vacation போது.  இந்த resort கட்றாங்களே, அவங்க ஏன் இந்த மாதிரி பாரம்பரிய வீடுகள் கட்டி நம்மளை தங்க விடக்கூடாது? பாரதியார் காணி நிலம் வேண்டும்னு ஆசைப்பட்டார்.  நான் இந்த மாதிரி பாரம்பரிய வீடு வேணும்னு ஆசைப்படறேன்.  அந்த வீட்டுல என்னோட இருக்க என் அப்பா, அம்மா, கணவர், குழந்தைகள்,பாட்டி, தாத்தா,பெரியப்பா, பெரியம்மா, அவர்களின் பிள்ளைகள், சித்தப்பா, சித்தி, அவர்களின் பிள்ளைகள்,அத்தை, அத்திம்பேர், அவர்களின் பிள்ளைகள்,மாமா, மாமி,அவர்களின் பிள்ளைகள்,அக்கா, அத்திம்பேர், அவர்களின் பிள்ளைகள்,அண்னா,மன்னி,அவர்களின் பிள்ளைகள், மாமியார், மாமனார், நாத்தனார், மாப்பிள்ளை,அவர்களின் பிள்ளைகள், மச்சினர், ஓர்ப்படி,அவர்களின் பிள்ளைகள்  எல்லாரும் வேண்டும்.  நாங்க எல்லாம் உட்காந்து பேச பெரிய முற்றம் வேண்டும். அங்கு குழந்தைகள் விளையாட வாசலில் மணல் வீதி வேண்டும்…..ம்ஹ்ம்……………..If you are antique like me and you like antique, Dakshin Chitra Welcomes You.    
           

EVP Theme Park: எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி Theme Park/Amusement Parkக்கு நிரய வரது kids & family தான்.  அப்படி இருக்கும் போது எதுக்காக இந்த theme parkல "R" rated Khajuraho replica இருக்கணும்? Highly obnoxious. இந்த மாதிரி theme parkக்கு  கட்டாயமா loversஒ இல்ல newly married couplesஒ வரப் போறது இல்ல. ஏன்னா, அவ்வளவு பைசா குடுத்துட்டு, "கொஞ்சம் உளறி கொட்டவா,கொஞ்சம் நெஞ்சை கிளறி காட்டவா", அப்படினு ஒருத்தர ஒருத்தர் பாத்து காதல் வசனம் பேசாம, ridesலலாம் போய் வெளவாலாட்டம் தலகீழ தொங்கிண்டு இருப்பாங்களா?  Husband,wife& kids போனாலுமே, பசங்களை வெளில நிக்க வச்சுட்டு, parents உள்ள போய் பாக்க முடியுமா? தாத்தா, பாட்டி, husband,wife & kids போனாலுமே, "அம்மா, இந்த பசங்கள பாத்துக்கோ, நாங்க உள்ள போய் பாத்துட்டு வரோம்," அப்படினா செருப்பு பிஞ்சுடாது??  Jokes aside, theme parkஏ ஒரு attraction தான் kidsக்கு.  அதுல எதுக்கு இந்த மாதிரி nonsense attractionலாம்.இதுல அந்த theme park websiteல "Khajuraho 2012 is pleasure to South Indians" அப்படினு போட்டு இருக்கு. ஏன்  " Gateway of India"வோட replica இருந்தா South Indiansக்கு pleasure இருக்காதா? "கேக்கறவன் கேனையா இருந்தா………. "இத பத்தி எங்க complaint பண்றதுனு தெரியல. இத படிக்கும் மக்களே, பெட்டி படுக்கைலாம் கட்டிண்டு, EVPக்கு கிளம்பிடாம, please help me do the needful.

இந்த தடவை முருகன் இட்லி கடை 'ஜிகர்தண்டா" சாப்டற பாக்கியம்(!!) கிடைச்சுது.  அன்னிக்கு சாப்பிடும் போது ரொம்ப திதிப்பா வயத்த பிரட்டித்து.  இப்ப நினைக்கும் போது "அடடா, நினைச்சா ஜிகர்தண்டா சாப்ட முடியாத ஊர்ல இருக்கோமே" அப்படினு இருக்கு.  யோசிச்சு பாத்தா  எவ்வளவோ நல்ல விஷயங்களேந்து தூர  வந்துட்டோமோனு தோண்றது.  நம்ம அப்பா, அம்மாக்கோ/மாமனார், மாமியார்க்கோ தெரியாத விஷயங்கள் இல்ல. Weather report என்ன, news report என்ன, religious report என்ன, GPS மாதிரி route சொல்றது என்ன, வீட்டுக்கு வேண்டிய hardware/software விஷயங்கள் என்ன, சமையல் குறிப்புகள் என்ன, பாட்டி வைத்தியம் என்ன….அப்பப்பா…..என்ன knowledge எல்லாருக்கும்.  அவங்களைலாம் அங்க விட்டுட்டு, இங்க நம்ம google search பண்ணிண்டு, apps download பண்ணிண்டு வாழ்க்கை நடத்திண்டு இருக்கோம்.

இதுக்கெல்லாம் காரணம், என்னிக்கோ எப்பவோ ஒருத்தர் செஞ்ச வேலை. அவர் மட்டும் கைல கிடைக்கட்டும்.  கைல கிடைச்சா…………அவர் கைய குலுக்கி "தலைவா, நீ மட்டும் இல்லனா எங்களுக்கு இந்தியாவோட அருமையே தெரிஞ்சுருக்காது. Thank You So much," அப்படினு சொல்லிருப்பேன்.  ஆனா அவர் தான் கைல கிடைக்கமாட்டாரே.  யார் அந்த அவர்?
எல்லாம் நம்ம Columbus தான்…. 

3 comments:

  1. Athu enna, Dakshin chita-la husband's cousin's cousin family - vittutteenga ? -- Krithiga

    ReplyDelete
  2. Seekkiram thaainaadu thirumba vendum!!! Columbus ingethaan engayaavathu theme parkla iruppaaru... vanthu rendu saathu saathittu nammallaam jollyaa oor suthalaam...

    ~Driver

    ReplyDelete
  3. appada, at last I got to know about your car rally.. Latha akka was also asking about it.. will ask her to read this.. btw I had been to Dakshina chithra thrice.. My favorite place.. Yet to take Niyanthan.. Have to plan for that soon..

    ReplyDelete