Chocolate Krishna

இந்த டிராமாவ Saturday அன்னிக்கு பாத்தேன். இன்னிக்கு கார்த்தால வரைக்கும் "chocolate Krishna" பத்தி எழுதணும்னு அபிப்ராயமே இல்ல. ஆனா கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு "quote" படிச்சேன். It was a love quote. சும்மா இல்லாம அந்த quoteஅ singularலேந்து pluralக்கு மாத்தி பாத்தேன்.  To my surprise, it was so applicable to our Saturday evening and Chocolate Krishna.  இப்படி நினைச்ச அடுத்த நிமிஷம், மண்டைக்குள்ள நண்டு பிராண்டி,என் கை வரைக்கும் வந்து,இதோ எழுத ஆரமிச்சுட்டேன்.
அந்த quoteஅ சொல்றதுக்கு முன்னாடி ஒரு ERC(இடம் சுட்டி பொருள் விளக்கம்).

சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு weekend callல எங்கம்மா "chocolate krishna" வ பத்தி ஆஹா ஓஹோனு புகழ்ந்துண்டு இருந்தா. t.v. ல எதாவது trailer பாத்துருப்பானு நேனைக்றேன்.  அன்னிலேந்து  இந்த டிராமா பாக்கணும்னு ஆசை.  ஆசை பட்டத்துக்கு ஏத்த மாதிரி எங்க ஊர் பக்கத்துல இந்த டிராமா வந்தது. பகத்துலனா, கிட்டத்தட்ட ஒரு 200 mile தொலைவுல உள்ள வேற ஊர்ல.  அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஏளனப் பார்வையை பொருட்படுத்தாமல் நாங்களும் அந்த டிராமா பாக்க போனோம். Guests of honor (யாரு, நாங்க தான்)தனியா விட்டுடக்குடாதுங்கற நல்ல மனசோட அந்த ஊர்ல இருக்கற உறவு மக்களும் எங்களுடுன் சேர, 4.30 மணி டிராமாக்கு 4 மணிக்கே போயி seat புடிச்சுட்டோம் . அந்த auditorium ல வேற எதோ நிகழ்ச்சி நடந்துண்டு இருந்தது. 5 மணி ஆச்சு டிராமா  ஆரமிக்கல. 5.30 ஆச்சு ஆரமிக்கல. கொஞ்சம் கொஞ்சமா பொறுமை போயிண்டு இருந்தது. 6 மணி
ஆச்சு,டிராமா ஆரமிக்கற சுவடே இல்ல. இதுக்கு நடுல crazy mohan sir வரலனு ஒரு புரளி வேற. கதி கலங்கிடோமில்ல. ஒரு மைலா, ரெண்டு மைலா 200 மைல். எல்லாம் இப்ப புஸ்னு போக போறதான்னு ஒரே tension. தலைய குடுத்தாச்சு, என்ன டிராமா வா இருந்தாலும் பாத்து தானே ஆகணும்.  6.30 மணி ஆச்சு.  அப்பவும் டிராமா ஆரமிக்கல.  வந்துருந்த எல்லார்க்கும் பொறுமை மொத்தமா போன சமயமா பாத்து "Chief Guest"ன் உரை. அவர் பேசினது காதுலயும் விழலை, அவர் பேசறத கேக்கறதுக்கு யாருக்கும் பொறுமையும் இல்ல.  அரங்கம் முழுக்க ஒரே அமளி துமளி தான். அடுத்ததா ஒரு அம்மா வந்து ஒண்னு சொன்னாங்க பாருங்க, அவங்க வார்த்தை அப்படியே எங்க நெஞ்ச துளைச்சுடுத்து. 4 மணிலேந்து 7 மணி வரைக்கும்  வேற நினைவே இல்லாம, "சீட்டு"பற்றோட  காத்திருந்த எங்களை பாத்து "நீங்க எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்"……... அப்படின்னு நெஞ்சுல  இறக்கமே இல்லாம சொல்லிட்டாங்க. அவங்க dictionary ல  பொறுமைக்கு அர்த்தம் என்னனு கொஞ்சம் கேக்கணும். ஒரு வழியா எல்லாரும் பேசி முடிச்சு டிராமா இரவு 7.30 மணி அளவில் இனிதே ஆரம்பித்தது.  எங்களின் ஊரு விட்டு ஊரு வந்து டிராமா பார்க்கும் ஆசை அன்றுடன் முடிந்தது.

மத்தபடி Chocolate Krishna  பத்தி சொல்லணும்னா எத எதிர்பார்த்து போனோமோ அது கெடைச்சுது.  1995 ல மெட்ராஸ்ல R.R. Sabha ல  ஒரு S.Ve.Sekar Sir டிராமா.  Curatain மெதுவா மேல போச்சு. We all expected a bright colorful setting.  Instead, ஒரே  Dull Setting.  ஒரே ஒரு 40watts light மேலேந்து ஊசலாடிண்டு இருந்தது.  furnitures இல்ல. ஒரு அம்மா ஊசில நூல் கோக்க முடியாம திண்டாடிண்டு இருந்தாங்க. இதுல பொலம்பல்  வேற "இந்த ஊசில கூட என்னால நூலை கோக்க முடியலையே". அந்த அம்மாவோட பையன்  அழுதுண்டே  எதோ  dialogue சொன்னான். அதுக்கு அப்புறம் அம்மாவும் பையனுமா சேந்து "நாம மூட்டை பூச்சி மருந்த குடிச்சுட்டு ஒரேடியா இந்த உலகத்தை விட்டே போயிடலாம்னு" ஒரு பெரிய ஒப்பாரி. audience நாங்களாம் ரொம்ப tension ஆயிட்டோம்.  என்னடா S.Ve. Sekar Sir டிராமா இப்படி இருக்கேன்னு ஒரே shock எல்லாருக்கும் .  Within minutes S.Ve. Sekar Sir entered in.  He said, "அவங்க அவங்க காசு செலவு பண்ணி, office வேலைய முடிச்சுட்டு, சந்தோஷமா ஒரு டிராமா பாக்கலாம்னு  வந்த்ருக்காங்க.  நீங்க என்னடானா ஊசில நூலு, மூட்டை பூச்சி மருந்துன்னு ஒரே அழுதுண்டு இருக்கீங்க. எல்லாத்தையும் மாத்துங்க " and the curtain came down.  மக்களின் கரவொலியாலும், சிரிப்பொலியாலும் அரங்கமே அதிர்ந்தது.  அதே மாதிரி Crazy Mohan Sir டிராமாக்கு போகும் போது சிரிப்ப தவிர வேற ஒண்ணுத்தையும் expect பண்ணிண்டு  போக மாட்டோம். வைரமுத்து sir சொல்லிருக்கார் "தன்னை மறந்த சிரிப்பு, தன்னை மறந்த உறக்கம், இந்த இரண்டிலும் தான் மனிதன் மனிதனாக இருக்கிறான்".  அன்றைக்கு  கிட்டத்தட்ட 300-400 மக்கள் Crazy Mohan சார் புண்ணியத்தில் மனிதர்களாக இருந்தார்கள்.

நொந்து நூலாகி, செத்து சுண்ணாம்பாகி, கடுப்பு தலைக்கேறி, பொறுமை இழந்து, துடி துடித்துக் கொண்டிருந்த எங்களை 

"You made us laugh when we didn't even want to smile"

Half of our evening was unforgettable, but the other half of our evening was memorable thanks to Mr.Crazy Mohan.


பின் குறிப்பு: Crazy Mohan Sir Language ல சொல்லணும்னா நாங்க பாத்தது
 Chocolate Krishna இல்ல, chocoLA……TE Krishna"!!

No comments:

Post a Comment