ஊரெல்லாம் "கரொனா, கரொனா" என்று பேசிக் கொண்டும், பயந்து கொண்டும் இருக்கும் போது, என்ன பச்சை கலரு சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா வேண்டி இருக்கிறது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது? நானும் தான் கரொனாவிற்கு பயந்து கொண்டு இருக்கிறேன். அப்புறம் என்ன பச்சை கலர் சிங்குச்சா?
கரொனாவிற்கும் பச்சை கலர் சிங்குச்சா தொடர்பு உண்டு...என் வாழ்க்கையில்.
ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் இருந்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு...வேண்டாம்...சென்னைக்கு வேகேஷன் வருபவர்கள், சென்னையையே வாங்கிக் குவிப்பார்கள். அதே போல் நானும் குவித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான், ஒரு குர்த்தியைக் கண்டேன். கண்டதும் காதல் கொண்டேன். அந்த குர்த்தியில் ஊரில் பச்சை, சிகப்பு, நீலம் என ஊரில் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் மென்மையாய் இறைந்ததிருந்தது. அதுவும் தவிர அந்த குர்த்தி மிகவும் சிறியதாகவும் இல்லாமல், மிகவும் பெரியாதகவும் இல்லாமல Goldilocks சுவைத்த porridge போல் சரியாக இருந்தது. அதுவும் தவிர அந்த குர்த்தியின் அழகை நான் ரசித்துக் கொண்டிருக்கும் போது, வேறொரு பெண்மணி அதை அவள் வசமாக்கிக் கொள்ள பார்த்தாள். வாங்கலாமா வேண்டாமா என்று கொஞ்ச நஞ்ச சந்தேகமும் அந்த பெண்மணியினால் மறைந்து போய், அந்த குர்த்தியை என் வசமாகிக் கொண்டேன்.
சென்னையிலிருந்து வந்து பெட்டியெல்லாம் ஒழித்து அந்த குர்த்தியை அணிந்து கொள்ளலாம் என்று எடுக்கும் போது...அட்டா, இந்த குர்த்தியும் அதன் வண்ணங்களும் spring seasonஐ நினைவூட்டுகிறதே...மார்ச் மாதம் first day of spring வருமே அன்று இதை புதிதாய் போட்டுக் கொள்வோம் என்று வைத்து விட்டேன். first day of spring அன்று புதிது போட்டுக் கொள்ளும் லூசு வழக்கம் எல்லாம் எனக்கு இல்லை. இப்பொழுது வந்ததிற்கு காரணம்...நான் வேலை செய்யும் இடம்.
Public Libraryயில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்பவர்களும் பல நாட்டை சேர்ந்தவர்கள், அங்கு வரும் patronகளும் பல நாட்டைச் சேர்ந்த்வர்கள். வேலை செய்வது பாதி, அங்கு வருபவர்களோடு பேசுபவது பாதி. அதுவும் யாராவது இந்தியாவைப் பற்றி கேட்டால் எனக்கு தெரிந்தவற்றை over exaggerate செய்து இந்தியாவைப் போல் ஒரு நாடில்லை என்று அவர்கள் நினைக்கும் விதம் செய்து விடுவேன்...ஒரு விஷயத்தை தவிர...தாஜ் மகாலைப் பற்றி கேட்டால் மட்டும். தாஜ் மகால் ஏன் எனக்கு பிடிக்காது என்று காரணத்தை சொல்லி, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவேன். இருக்கட்டும்...பச்சை கலர் சிங்குச்சாவிற்கு வருகிறேன்.
போன வருடத்தில் ஒரு நாள் முதல் முறையாக வெள்ளையும் பச்சையும் கலந்த சூரிதார் அணிந்து லைப்ரரிக்குச் சென்றேன். (அப்போது எனக்கு தெரியாது , "சுரிதார் அணிந்து வந்த தென்றலே" என்று எல்லோரும் என்னை ஆங்கிலத்தில் பாராட்டப் போகிறார்கள் என்று..) உள்ளே நுழைந்ததும் தான் தாமதம்....ஒவ்வொருவராய் என் உடையைப் பாராட்ட.....எனக்கு கல்லூரி நாட்கள் நினைவில் வந்தது. அந்த காலங்களில் நாம் மற்றவர் உடைகளைப் புகழ, மற்றவர்கள் நம் உடைகளைப் புகழ....கோலாகலமான நாட்கள்....அதற்கு பின் கல்யாணம், குழந்தை, அமெரிக்கா, ஜீன்ஸ் என்று வாழக்கை மாறிப் போனாலும்... அவ்வப்பொது நம் உடைகளுக்கு பாராட்டு கிடைத்தாலும்....அன்று என் உடன் பணிபுரியும் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் பாராட்டும் போது... ஆளைக் கண்ட சமுத்திரமானேன். Weather நன்றாய் இருக்கும் சமயங்களில் இந்திய உடைகளை அணிந்து...என் கல்லூரி வாழ்க்கைக்குச் சென்றேன்.
இப்படி இருக்கையில் தான் போன மாதத்தில் ஒரு நாள் அந்த பச்சை கலர் , சிகப்பு கலர் , எல்லா கலர் குர்த்தியை அணியலாம் என்று நினைத்த போது....அடடா இன்னும் ஒரு மாதத்தில் spring வந்துவிடும்...ஊரே ப்ளாக் அண்ட் வைட்டிலிருந்து வண்ண மயமாய் மாரும், அந்த சமயத்தில் இந்த கலர் குர்த்தியை அணிந்து பாராட்டை பெறுவோம் என்று அணியாமல் விட்டு விட்டேன். பச்சை கலர், குர்த்தியோ இங்கு முக்கியமில்லை. பாராட்டு..பாராட்டு தான் முக்கியம். யூ ட்யூபில் அக்ராஹரம் ரெஸிப்பிஸில் வரும் அந்த வயதான மாமி சொல்லுவாள், "இந்த பெண்களுக்கு எத்தனை வயசானாலும், நீ அழகாயிருக்க, உன் ட்ரெஸ் அழகாயிருக்குனு சொன்னா சந்தோஷம் தான்." கரெக்ட்டு தானே?
எங்கே விட்டேன்...ஆங்...first day of spring...அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கையில் தான் உலகம் கரொனாவால் பீடிக்கப் பட்டு, செய்வதறியாமல் திண்டாட ஆரம்பித்திருந்தது. அமெரிக்காவிலும் கரொனா அதிகமாக, போன வாரத்திலிருந்து பள்ளிகளிளுக்கும், லைப்ரரிகளுக்கும் இரண்டு வார விடுமுறை அளிக்கப் பட்டது. அந்த இரண்டு வார விடுமுறையினால் , நேற்று first day of spring அன்று என் ஆசை நிறைவேறாமல் போனது.
இந்த உலகத்தில் எல்லாம் இரட்டை. இரவு, பகல், வெப்பம், குளிர், இன்பம், துன்பம்....அது போல் கரொனா என்ற ஒன்றினால் பீடிக்கப்பட்டு உலகம் முழுவதும் துன்பப் படுகிறதோ, அதே போல் வேறு ஏதோ ஒன்றால் உலகம் முழுவதும் இன்பத்தை அனுபவிக்கப் போகிறது. அன்று பச்சை கலர் சிங்க்ச்சா என்று கூத்தாடுவோம்.
உடுத்துவது என்ன, சாப்பிடுவது என்ன என்று கவலைப் படாமல், கரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் அத்தனை மருத்துவர்களுக்கும், நர்ஸ்சுகளுக்கும் மற்றும் மருத்துவ மனையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment