சனிக்கிழமை மாலை....இந்தியன் கிராஸரியில் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த
வித்யா அதிர்ந்தாள். பேய் மழை. பத்து நிமிடத்துக்கு முன்னால் இந்த கடையில் நுழையும் போது சுளீரென்று வெய்யில் அடித்ததே என்ற யோசனையுடன் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த காரைப் பார்த்தாள். பக்கத்தில் தான் இருக்கிறது கார், வேகமாய் ஓடிவிடலாம் என்று நினைத்தபடி வேகமாய் பொருட்களை தூக்கிக் கொண்டு காரை நோக்கி ஒடினாள். பொருட்களை வைத்துவிட்டு காரில் ஏறுவதற்குள் நனைந்து போனாள். காரில் ஏறிய பின் மழை இன்னும் வலுவாக பெய்வது போல் இருந்தது. எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. மழை நிற்கும் வரை காத்திருப்பதா இல்லை கிளம்பிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவளின் ஃபோன் அடித்தது. கணவரின் புகைப்படமும் பெயரும் ஃபோனில் தெரிந்தது.
"வித்யா...மழை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. இந்த மழைல கார் ஓட்டிண்டு வராத. பத்து நிமிஷத்துல மழை நின்னுடும். நின்னப்புறம் வா...."
"சரி...." என்று சொல்லி பின் ஏதேதோ பேசிவிட்டு அழைப்பை முடித்தாள். வாட்ஸ்ப்பில் ஆறு மேசேஜ்கள் இருப்பது தெரிய வர, வாட்ஸ்ஸபிற்குள் சென்று மெசேஜ்களைப் பார்த்தாள். எல்லாமே ஃபார்வார்ட் மெசேஜ்கள். அந்த மெசேஜகளை ஒரு நோட்டம் விட்டாள். பின் யாரேனும் புதுசாய் ஃப்ரொபைல் ஃபோட்டோ போட்டிருக்கிறார்களா என்று ஃபோன் ஸ்கீரினை மேலே நகர்த்திப் பார்க்கையில் அவள் அப்பாவின் மெசேஜ் கண்ணில் பட்டது.
கண்ணில் பட்ட மெசேஜை படித்துவிட்டு, டைப் அடிக்கத் தொடங்கினாள்.
தலையை தூக்கிப் பார்த்தாள். மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.
கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.
கைகளால் முகத்தைப் மூடிக் கொண்டாள். மழை நின்று போய் இருந்தது.

No comments:
Post a Comment