
சுஜாதா அவர்களின் புத்தகங்களைத் தவிர வேறு தமில் எழுத்தாளார்களின் புத்தகங்களைப் படிப்பதில்லை. அப்படி இருக்கையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் அவரின் "பிரிவோம் சந்திப்போம்" புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில் வரும் ஆண் ஒரு பெண்ணிம் மேல் தீரா காதல் கொண்டிருப்பதை விவரித்திருந்தார். நானும் எவ்வளவோ காதல் கதைகள் படித்து இருக்கிறேன். எத்தனையோ போல்விதமாக காதல் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால் சுஜாதா அவர்கள் போல் இது வரை யாரும் காதலை அழகாக சொல்லவில்லை. Mind blowing வரிகள். எப்படி அது போல் எழுதினார் என்று பிரமித்து, மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படித்து படித்து....இதோ அந்த வரிகள்
மதுமிதாவைத் திறந்து,
முகத்தில் மதுமிதாவை இறைத்துக் கொண்டு,
மதுமிதா போட்டுக் கழுவிக் கொண்டு,
மதுமிதாவால் துடைத்துக் கொண்டு,
மதுமிதாவை திறந்து
மதுமிதாவைப் படித்தான்.
இந்த வரிகள் தந்த பிரம்மிப்பில் இருந்து மீண்டு, அந்த புத்தகத்தை முடித்து, அடுத்த புத்தகத்தை திறந்தால்......சிரிப்பு.....நேற்று முழுவதும் அவர் எழுதிய ஒன்றை நினைத்து நினைத்து இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன். வெறுமையான சிரிப்பு இல்ல...பொங்கி பொங்கி வரும் சிரிப்பு....காரணம் இல்லாமல் நான் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து யார் என்ன நினைத்துக் கொண்டார்கள் என்று எனக்கு தெரியாது...எப்படி சுஜாதா சார் இது மாதிரி உங்களால் எழுத முடிகிறது...உங்களால் மட்டும் தான் இது போல் எழுத முடியும் என்று மானசீகமாய் பேசி......அந்த வரிகள்....
சமீபத்தில் குங்குமம் பத்திர்கையின் வாசகர்கள் எனக்கு ஆயிரக்கணக்கான
கேள்விகள் அனுப்பியிருந்தார்கள். அதில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்வி:
உங்களைப் போல் எழுத்தாளான் ஆவது எப்படி?..
யோசித்துப் பார்த்தேன். அவர்கள் என்ன பதில் விரும்புகிறார்கள்?
சமையல் குறிப்புகள் போலவா?
"கொஞ்சம் சம்பவங்களை வாணலியில் இட்டு,
பொன் போல் வறுத்துக் கொள்ளவும்.
கதை கரு சேர்க்கவும். வேக வைக்கவும்.
பொங்கி வரும் சமயத்தில் இரண்டு தேக்கரண்டி
அனுபவங்களைச் சேர்த்து, தேவையான அளவு செக்ஸ் சேர்த்து...
இப்படியா?
நேற்று சிரித்தது போதாமல் இன்று காலை வேறு ஒரு முறை படித்து சிரித்து கொண்டிருக்கும் போது தான்...வாட்ஸப்பில் ஒரு மெசெஜ் வந்தது. சுஜாதா அவர்கள் எழுதினது அல்ல. சுஜாதா அவர்களின் கடைசி தினங்களைப் பற்றி சுஜாதா தேசிகன் அவர்களால் எழுதப்பட்டது. ஆரம்ப வரியைப் படித்ததுமே தொண்டை அடைத்தது. படிக்க படிக்க கண்ணில் நீர் நிறைந்தது.
அப்போலோ தினங்கள்!
அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது.
27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.

இந்த உலகில் இருந்து எடுத்துக் கொண்ட சிலரை, கடவுள் நமக்கு மீண்டும் தர வேண்டும். அந்த சிலரில் சுஜாதா ஒருவர்.
இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன் காரணம் வாத்தியார் தான் எங்கோ நான் படித்த ஒன் லைனர் உங்களுக்காக “அந்த தெரு வேகமாக திரும்பியது’ என்ன ஒரு coinage,
ReplyDeleteநானும் படிச்சுருக்கேன்....எங்கனு ஞாபகம் தான் இல்ல...
Delete