கோவில் உண்டு. அப்பொதைக்கு அப்பொழுது வந்து உன்னை கண்டு கொள்கிறோம்.
அதோடு விடவேண்டியது தானே?
அது என்ன? வீதியில் வருவது?
சரி வீதியில் வருகிறாய்...கண்டோம், தொழுவோம்.
அதோடு விட வேண்டியது தானே?
அது என்ன? நாங்கள் வெளிநாட்டில் வசிக்க சென்றால் நீயும் அங்கே வருவது?
சரி வந்தாய்....வெய்யிலோ, பனியோ எதையும் பொருட்படாது உன்னை காண வருகிறோம்.
அதோடு விட வேண்டியது தானே?
அது என்ன? எங்களுடைய facebookஇல் நீ வருவது?
சரி facebookஇல் வருகிறாய்..... லைக் போட்டு விட்டு போய் கொண்டே இருக்கிறோம்.
அதோடு விட வேண்டியது தானே?
சரி வாட்ஸ்ப்பில் வருகிறாய்..... படித்துவிட்டு பறந்து கொண்டிருக்கிறோம்.
அதோது விட வேண்டியது தானே?
Twitter என்ன, Pinterest என்ன, நாங்கள் போகும்/போகாத எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாய்.
நாளை இந்த technology எடுக்கும் அவதாரம் தெரியாது....அந்த அவதாரத்திற்கு ஏற்ப நாங்கள் ஏற்க போகும் வேடங்களும் தெரியாது....ஆனால்
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய்
பின்னும் இராமனாய் தாமோதரனாய் கல்கியுமாய் தசாவதாரமெடுத்த உன்னிடம்
Technologyயின் அவதாரங்களும் பலிக்காது...நாங்கள் போடும் வேடங்களும் பலிக்காது.
ஏதோ ஒரு விதத்தில் எங்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டே தான் இருக்க போகிறாய்..
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது.
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
No comments:
Post a Comment