விடை கொடு எந்தன் நாடே...

உருண்டு ஓடி விட்ட நாட்கள்.
ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகள்.
நடையாய் நடந்த திருவல்லிக்கேணி வீதிகள்.
ஆட்டோவில் சுற்றிய சென்னை சாலைகள்.
"பனி விழும் மலர்வனம்"  சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் பெறவில்லையே - வருந்திய ஆட்டோ டிரைவர்.
குற்றங்கள் பல இருந்தாலும், புறம் பேசா, பொய் சொல்லா ஓவியாவை கொண்டாடிய தமிழகம்.
புத்தகத் திருவிழாவில் சுஜாதாவின் புத்தகங்களோடு கழித்த மணித்துளிகள்.
அங்கே அறிமுகமாகி  அன்பும் அறிவுரையும் அளித்த பதிப்பாளர் .
திட்டமிட்ட மன்னார்குடி பயணம்.
அங்கே திட்டமிடாமல் வந்த என் அப்பாவின் கதைகள்.
திருவல்லிக்கேணி பசுக்கள்டோரா ஹேர் ஸ்டைலுடன் மன்னார்குடி யானை.
கூப்பிடு தூரத்தில் இருந்ததால், போகாத மெரீனா கடற்கரை.
அன்பால் அரவணைத்த உறவுகள்.
நட்பை நினைக்க வைத்த பன்னிரெண்டாம் நம்பர் பஸ் பயணம்
கமர்கட்குல்ஃபிசோன்பப்டிதேன் மிட்டாய், பஞ்சு மிட்டாய்,பன்னீர் சோடாரோஸ் மில்க்அம்மாவின் கரைத்ததோசைமாமியாரின் கதம்ப குழம்பு,  ஹோட்டல் உணவுகள்.
சுட்டெரித்த வெயில் நாட்கள் பல.
சுகமான அந்தி மழை நாட்கள் சில.
முடிவுக்கு வருகிறது சென்னை வாசம் .
பெட்டிக்குள் பொருட்களை எடுத்து வைக்கையில் எட்டிப் பார்க்கும் கண்ணீர்,
"சென்று வா" என்று சுற்றம் விடைகொடுக்கையில் வழிந்தோடும்.
அம்மாவாய் பிறிகையில்  தொண்டை அடைத்து....
பெண்ணாய் பிறந்ததற்கு  நொடிப் பொழுதும் வருத்தம் இல்லை.
ஆனால் பிரிவுத் துன்பம் படுத்தும் வேளையில் சோகத்தையும், கண்ணீரையும் மனதுள் மறைக்கும் ஆணாய் மாறிட ஆசை.
ஆறு மாதமா, ஒரு வருடமா, இரண்டு வருடங்களா சென்னை பயணம் இனி எப்பொழுதோ.
மீண்டும் வரும் வரையில் இந்த நினைவுகளுடனான அமெரிக்க வாழ்க்கை.
விடை கொடு எந்தன் நாடே
கடல் வாசல் தெளிக்கு வீடே.






2 comments:

  1. இவ்வளவு நல்ல விசயங்கள், இங்க இருக்கும்போது.. விடை கொடு எந்தன் நாடேன்னு சொல்லிட்டு US போறதுக்கு காரணம் என்னவோ...??
    உங்க குடும்பத்தோடு தாய்நாட்டிலேயே செட்டில் ஆகலாமல்லவா..??😜 😊 😊

    ReplyDelete
    Replies
    1. பிரிந்ததால் தான் அருமை தெரிகிறது

      Delete