வார்த்தை முட்டுது. முட்டி மோதி எழுதிய கவிதையோ, ஏதோ இதோ!!
முகம் வருடும் காற்று
காற்றில் ஆடும் புற்கள்
புற்களில் சிரிக்கும் பனி
பனியில் நனையும் மலர்கள்
மலர்கள் பேசும் வண்ணங்கள்
வண்ணங்கள் தீண்டும் வண்டுகள்
வண்டுகள் இசைக்கும் கானம்
கானத்தில் லயிக்கும் மனம்
மனம் விரும்பும் கோடை
கோடையில் வரும் சித்திரை
சித்திரை தரும் ஜெயம்
ஜெயத்தைக் குவிக்கும் கரம்
ஜெயமே!!வருக!!வருக!!
Superb!
ReplyDelete