My article on Cinema Vikatan
"முரட்டுக்காளையை"ப் பார்த்து ஆடவில்லை, பாடவில்லை,கொண்டாடவில்லை.
"அன்புள்ள ரஜினிகாந்த்" என்று வாழ்த்து மடல் எழுதவில்லை.
"தர்மதுரை" என்று புகழ் பறப்பவில்லை.
"தளபதி, எந்தன் தளபதி" என்று முழங்கவில்லை.
"மன்னர் மன்னனே" என்று கோஷம் இடவில்லை.
"அண்ணாமலை" என்று கூப்பாடு போடவில்லை.
"எஜமான்" காலடி மண் எடுத்து நெற்றியில் பொட்டு
வைக்கவில்லை.
"பாட்ஷா,பாட்ஷா" என்று கூவவில்லை.
"படையப்பா" என்று கதறவில்லை.
"சிவாஜி" வாயிலே ஜிலேபி என்று உளறவில்லை.
இது எதுவும் செய்யாத நான்
ஒன்றே ஒன்று செய்யப் போகிறேன்.
மனதில் மகிழ்ச்சியுடனும்
வாயில் முறுவலுடனும்
நான் செய்யப் போகும் ஓன்று.
ரஜினி Sir, நீங்கள் ஒரு முறை சொன்னால்
நூறு முறை சொன்னது போல் எப்போதுமே.
ஆனால் இன்று ஒரு நாள் மட்டும்
நான் ஒரு முறை சொல்வது ஆயிரம் முறை
சொல்வது போல்,
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி Sir."
No comments:
Post a Comment