என் விகடனில் என் Blog

நிஜமா சொல்லணும்னா எனக்கு கையும் ஓடல, காலும் ஒடல.  என்ன பண்றதுனு தெரியல.  மனசுல ஒரே பட்டாம்பூச்சியா பறக்கறது.  ஓண்ணும் இல்ல, விஷயம் இது தான்.  கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏதேச்சையா "என் விகடன்(சென்னை)"onlineல படிக்கற chance கிடச்சுது.  நல்ல ஜனரஞ்ஜகமா இருக்கே இந்த விகடன் அப்படினு நினைச்சு படிச்சுண்டு இருக்கும் போது, அதுல "வலையோசை"னு ஒரு பகுதி இருந்தது. அது click பண்ணி உள்ள போனா, அது சென்னைல இருக்கற bloggers தங்களோட blog அ showcase பண்றதுக்கான ஒரு பகுதி.  மனசுல ஒரு சின்ன ஆசை, என்ன தான் நம்ம அமெரிக்கால இருந்தாலும் நம்ம base சென்னை தானே.  இந்த வலையோசைக்கு ஏன் நம்ம blog அனுப்பக்கூடாது அப்படினு நினச்சு emailஅ தட்டிட்டேன்.  ரெண்டு நாள் wait பண்ணேன்.  ஒண்ணும் பதிலே இல்ல.  சரி விடு, இது சென்னை மக்களுக்கு மட்டும் தான் போல இருக்குனு விட்டுட்டேன்.  ஒரு பத்து நாளைக்கு அப்புறம், ஒரு இனிய காலை பொழுதில் விகடன்லேந்து mail வந்தது.  என்னால நம்பவே முடியல.  நமக்கா, விகடன்லேந்தா, அப்படினு ரொம்ப நேரம் அந்த mailயே பாத்துண்டு இருந்தேன்.  ஓ…நம்ம blog விகடன்ல வரப்போறது அப்படினு அன்னிக்கு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சதுதான்.  Every Friday around 9 a.m. you get to see the new issue of en vikatan.  நானும் எனக்கு mail வந்த அன்னிலேந்து friday friday என் விகடன check பண்ணிண்டே இருந்தேன், என் blog வரவே இல்லை.  இன்னிக்கு கார்த்தால நான் கண் முழிக்கும்போதே மனசுல ஒரு குரல் "சுஜா இன்னிக்கு உன் blog வரப்போறது" அப்படினு சொல்லித்து.  ஒன்பது மணி ஆச்சோ இல்லையோ, "என் விகடன்" log பண்ணேன்.  I was shocked.  To my dismay, "வலையோசை" ங்கற பகுதியே இல்ல இந்த வாரம்.  இது என்னடா வம்பா போச்சுனு, வேற எதுலயாவது இருக்கானு almost எல்லாத்தையும் படிச்சுட்டேன்.  ஒண்ணுத்தலயுமே என் blog காணும்.  சரி திருச்சி, மதுரை இல்ல வேற எதாவது ஊர் issuesல இருக்கானு தேடிப் பாத்தா அங்கயும் காணும்.  facebookஆல தான் "என் விகடன்" பத்தியே தெரிஞ்சுது. facebookல எதாவது வந்திருக்கானு பாத்தா அங்கயும் ஒண்ணும் இல்ல. I was totally devastated.  இத்தனை வாரமா வலையோசைனு ஒண்ணு வந்துண்டு இருந்தது, இப்ப நம்ம நல்ல நேரம் அத காணும். அய்யோ ரொம்ப நம்பினேனே இன்னிக்கு வரும்னு அப்படினு மனசுக்குள்ள ஒரேஅழுகை.  எந்த வேலை பண்றதுக்கும் மனசே இல்ல.  இந்த பசங்க "gulab jamun"பண்ணி வைனு சொல்லிட்டு போயிருக்கே, அதையாவது பண்ணுவோம் அப்படினு பண்ணாக்கா, my  mood reflected in the jamuns. எல்லாம் கன்னங்கரேல்னு கருப்பா வந்திருக்கு.  என் வாழ்க்கைல இவ்வளவு கேவலமா குலாப் ஜாமூன் பண்ணதே கிடையாது.   இதயே யோசிச்சுண்டு இருந்தா வேலைக்கு ஆகாது.  I have a family to feed, அப்படினு முடிவு பண்ணி, பைய தூக்கிண்டு கடைக்கு போயிட்டேன்.  கடைல போய் இந்த வெண்டக்காய வாங்கும் போது திரும்ப வேதாளம் முருங்க மரம் ஏறிடுத்து.  "ஆமா, யாருக்கு வேணும் இந்த வெண்டக்காய்.  அவ அவளுக்கு இங்க மனசு சரியில்ல, இப்ப என்ன வெண்டக்காயும், கத்திரிக்காயும் வேண்டிக் கடக்கு. எல்லாத்தையும் தூக்கிப் போடு" அப்படினு புலம்பிண்டு இருக்கும் போது, வெள்ளை புடவை கட்டிண்டு, தலைய விரிச்சு விட்டுண்டு என் மனசாட்சி(ஆவி தானே இந்த வெள்ளை புடவை get upல இருக்கும்,ஏன் என் மனசாட்சி..who cares?) எட்டிப் பாத்து, "ஏன் இப்டி புலம்பற, இந்த வாரம் இல்லாட்டா அடுத்த வாரம் வரும்," அப்படினு சொல்லித்து.  "ஆங்.  தலைவர் சொல்லிருக்கார், வரது வராம இருக்காது, வராம இருக்கறது என்னிக்குமே வராது.  அதுக்கு ஏத்த மாதிரி இந்த வலையோசய வேற காணும்.  வடிவேலு சொல்ற மாதிரி நான் பாட்டுக்கு சும்மா தானே இருந்தேன்.  எதுக்கு இந்த mailலாம் அனுப்பி…….என்ன இப்டி புலம்ப வச்சுட்டாங்களே" அப்டினு சொல்லி முடிக்கலை, அதுக்குள்ள இந்த மனசாட்சி திரும்ப வந்துடுத்து.  whack a mole மாதிரி அத அடக்கிட்டு, carல ஏறி வீட்டுக்கு வந்து, bag எல்லாம்  ஒரு மூலைல கடாசினேன்.  நம்ம சந்தோஷமா இருக்கோமோ, சோகமா இருக்கோமோ இந்த வயத்துக்கு ஒண்ணும் கவலையே கிடையாது.  அது பாட்டுக்கு தன் வேலைய பண்ணிண்டு அப்பப்ப நமக்கு பசிய குடுத்துண்டே இருக்கும்.  "இப்ப சாப்பாடு தான் ரொம்ப முக்கியம்" அப்படினு நினைச்சுண்டே சாப்ட  ஆரம்பிச்சேன்.  சாப்டும் போது தான் நான் iphoneல news படிப்பேன்.  அப்படி தான் இன்னிக்கும் என் கை automaticஆ iphoneஅ எடுத்தது.  என்ன ஆச்சு, எப்படி நடந்ததுனு எத touch பண்ணேன் தெரியலை, என் iPhoneஅ பாக்கும்போது, என் blogஓட audience status page openஆ இருந்தது.  அதுல today's page view number was whooping too much.  என்னது நமக்கு இன்னிக்கு இவ்வளவு viewers அப்டினு investigate பண்ணி பாத்தா எல்லாம் "என் விகடன்.காம்"லேந்து வந்திருக்கு.  என்னடாது, நம்ம கண்ணுக்கு தெரியல இவங்களுக்கு மட்டும் எப்டினு, திரும்ப என் விகடன் websiteக்கு போனேன்.  அதுல இருந்த எல்லாத்தையும் படிச்ச நான், ஒண்ணே ஓண்ண விட்டுட்டேன்.  அது "இருப்பதுவும் இல்லாததும்".  என்னோட blog heading "something and nothing"ஒட transaltion தான் "இருப்பதுவும் இல்லாததும்".  எனக்கு தோணவே இல்லை.  விரல் நடுங்க I clicked that link. And there opened the page with my picture and vikatan's brief intro to my blog. ஒரு பட்டாம்பூச்சி multiply ஆகி ஆயிரம் பட்டாம்பூச்சியா என் மனசுல பறக்க ஆரம்பிச்சுடுத்து.  நினவு தெரிஞ்ச நாள்ளேந்து இந்த விகடன படிச்சுண்டு இருக்கேன்.  இன்னிக்கு அதே விகடன்ல என் எழுத்தப் பாக்கும் போது, நன்னா தான் இருக்கு.   எவ்வளவு பேர் படிப்பாங்கறது பெரிய விஷயம் இல்லை.  Even I get less readers I really don't worry because, விகடனே நம்மள படிச்சாச்சு, வேற என்ன எனக்கு வேணும். அதான் கையும் ஒடல காலும் ஓடல.

 எவ்வளவு தான் நான் எழுதினாலும் அத படிக்கறதுக்கு யாருமே இல்லனா, எழுதி என்ன பயன்.  அதனால  I sincerely thank all my readers.  நீங்களாம் இல்லாம நான் இவ்வளவு தூரம் எழுதியே இருக்க முடியாது. Thank You so much.ஆங்……..கண் கலங்குதே.   அப்ப சோகமாஇருந்தேன் சாப்ட புடிக்கலை, இப்ப சந்தோஷமா இருக்கேன், சாப்ட முடியல.  அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு வேலை இருக்கு.  I have to hit the store again to get another packet of Gulab Jamun.!!!

1 comment:

  1. Hi SUJATHA, the writer, i too found the blog atlastafter a long period. i enjoyed it like anything like ur gulab jamun.'m also one of ur readers.MY BEST WISHES SRITHI

    ReplyDelete