சிரி சிரி சிரி சிரி சிரி




பொழுது போகாமல் தமிழ் திரைப் படப் பாடல் கேட்டு கொண்டு இருக்கும்போது, உதித்த சின்னஞ்சிறிய
தொகுப்பு இது. இதற்கு பின்னால் பல பேர் இருந்தாலும், இது முழுவதும் என் கற்பனைக் கிறுக்கல். இது இருப்பவரையோ, இல்லாதவரையோ, உங்கள் எதிர் வீட்டு அய்யாவையோ, என் பக்கத்துக்கு வீட்டு அம்மாவையோ, உங்கள் life partnerயோ, என் partner for lifeயோ குறிப்பிட்டு எழுதப்படவில்லை . மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலும் எழுதப்படவில்லை. மீறிப் புண்பட்டால் , nebasulf அல்லது neosporin பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

அதாகப்பட்டது, நம்ம Hero பெட்டி படுக்கை எல்லாம் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பறாரு. நம்ம ஹீரோயனிக்கு ஒரே வருத்தம். கண்ணீர் மல்க hero க்கு bye-bye சொல்றாங்க. அப்பொழுது ஹீரோயினி நெஞ்சில் உதிக்கும் பாடல்,


"போகுதே, போகுதே என் பைங்கிளி வானிலே, நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே."

ஆச்சா, Hero ஊருக்கு போனதுலேந்து ஒரு ரெண்டு நாள் ஹீரோயினிக்கு ஒண்ணும் பிடிக்கலை.
எத பாத்தாலும் hero ஞாபகம் வந்துகிட்டே இருக்கு. ஒரே அழுகையா வேற . அந்த சோகத்துல ஹீரோயினி பாடும் பாடல்,

"உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல, உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல, நீ இல்லாமல் நானும் நானல்ல."

Now comes the best part. ரெண்டு நாள் சோகக் கடல்ல மூழ்கி இருந்த நம்ம ஹீரோயினி மூணாவது நாள் தெளிஞ்சிட்டாங்க. hero இல்லாததால வீட்டுல வேலை கம்மி. முக்கியமா சமையல் வேலை இல்லை. "அவர் இல்லாத வீட்டுல அவரைக்கையா?" அப்படின்னு நெனைச்சு நம்ம ஹீரோயினி எதுவும் சமைக்காம, எந்த வேலையும் ஒழுங்கா பண்ணாம jolly யா இருக்கும்போது heroவை நினைத்து ஹீரோயினி பாடும் பாடல்,


"எங்கிருந்தாலும் வாழ்க, நம் இதயம் அமைதியில் வாழ்க!!!"

ஒரு வாரம் ஆச்சு, ரெண்டு வாரம் ஆச்சு. சமையல் இல்லை சரி, இந்த பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணுமே!ஹீரோயினிக்கு algebra ஒரே காப்ரவா இருக்கு, probability of heroine teaching probability is very less. எப்ப தான் இந்த hero திரும்பி வர போறாரு, ஹீரோயினிக்கு தாங்கலை. வரட்டும் வைச்சுகறேன் என்ற நினைப்போடு இருக்கும் போது ஹீரோயினி மனதில் உதிக்கும் பாடல்,


"நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன், வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்!!"

அப்பாடா, ஒரு வழியா hero திரும்பி வந்துட்டாரு. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் இல்ல.
இப்ப ஹீரோயினி பெட்டி படுக்கைலாம் கட்டிக்கிட்டு குழந்தை குட்டிகளை கூட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பறாங்க.கண்ல
தண்ணியோட hero க்கு bye-bye சொல்லிட்டு trainலையோ, busலையோ, carலையோ, planerலையோ ஏறிப் போறாங்க.
ஹீரோயனிக்கு விடை கொடுத்துவிட்டு, நம் hero சொல்லும் அந்த நான்கு சந்தோஷ வார்த்தைகள்,

"என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!!!!!"





2 comments: