இரண்டு மாதங்கள் கழித்து வாக்கிங்க் போகலாம் என்று மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் அணிந்து கொண்டு கிளம்பினால், என் வீட்டு கதவை திறந்தவுடன்...காதில் ஒலித்தது அந்த பாடல். நம் வீட்டில் பாட்டு கேட்பது ஒரு இன்பம் என்றால், பக்கத்து வீட்டிலிருந்து வரும் பாடலைக் கேட்பது தனி இன்பம். அதுவும் அமெரிக்காவில் பக்கத்து வீட்டிலிருந்து தமிழ் பாடல்...சாதாரண பாடல் இல்லை..."கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா..." மனதை தொட்ட பாடல். வாக்கிங் போவதை மறந்து அப்படியே நின்று விட்டேன். சில நொடிகளில் அந்த வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்க..."சோஷியல டிஸ்டன்ஸிங்" எங்கிருந்தோ நினைவில் வர...அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்து விட்டேன். கரோனா ஆட்டுவிக்கிறது. இது கூட பரவாயில்லை. என் மகள்...
மாஸ்க், க்ளவுஸ் காலத்திற்கு முன் என் மகளை "க்ரோஸரி" வாங்க போகலாம் வா, என்றாள் லட்ச ரூபாய் குடுத்தாலும் வர மாட்டாள். நேற்று அவளாகவே வந்து "க்ரோஸரி ஸ்டோர்ஸ்க்காவது நான் போகலாமா" என்று கேட்டாள்... கரோனா வெச்சு செஞ்சிங்.
99% கரோனாவால் கஷ்டம், துன்பம் என்றாலும், 1% கரோனாவால் இன்பமும் உண்டு.
காலை நேர பரபரப்பு இல்லை.
காலேஜ் படிக்கும் மகன் வீட்டில் இருப்பது பெரு மகிழ்ச்சி.
குடும்பமாய் அவ்வப்பொழுது பேசி பொழுதைக் கழிக்க முடிகிறது.
உறவினர்களுடந் ஃபோனில் பேச நேரம் இருக்கிறது.
மிக முக்கியமாக புத்தகங்கள் படிக்க நேரம் இருக்கிறது.
அதற்கும் மேலாக என் புத்தகங்களை கிண்டிலில்(Kindle) வெளியிட நேரமிருக்கிறது. கடந்து வாரம் இரண்டு புத்தகங்கள் . அதன் வெற்றியைப் பார்த்து இந்த வாரம் மற்றும் ஒரு புத்தகம்.
அந்த புத்தகங்களில் இருக்கும் கதை, கட்டூரை எல்லாம் இங்கிருந்து எடுத்தவை தான். ஒன்று, இரண்டு புதியதாய் எழுதியிருக்கிறேன். மொத்தமும் புதியதாய் எழுதுவதற்கு நேரமும், விஷயமும் இருந்தாலும், எழுதுவதற்கு உண்டான டிஸ்ப்ளின் இல்லை. ஆதலால் இருப்பதை வைத்து சமாளித்து இருக்கிறேன். இனிமேல் புத்தகம் வெளியிடுவதென்றால், புதியதாய் தான் எழுத வேண்டும்.
நன்றி நவிலல்:
புத்தகங்கள்/பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் இருந்ததால் தான் என்னால் எழுத முடிந்தது. அந்த பழக்கத்தைக் கொடுத்த என் அம்மாவிற்கு நன்றி.
அந்த காலத்தில்... தமிழ நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பத்திரிக்கைகளையும் (விகடன் முதல் கல்கண்டு வரை) தான் படிக்காமல்...என் வீட்டில் உள்ளவர்கள் படிப்பதற்காகவே வாங்கிக் கொடுத்த எங்கள் குடும்ப நண்பர் என்று பெயருக்குச் சொன்னாலும், எங்கள் குடும்பத்தில் ஒருவரான் சுந்தரம் மாமாவிற்கு நன்றி.
படித்தால் மட்டும் போதுமா...எழுத வேண்டாமா? தொலைத் தொடர்பு வசதியில்லா அந்த காலத்தில், "கடிதங்கள்" மூலம் என் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் அக்கா, அத்திம்பேருக்கு நன்றி. ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதுவதற்கு வித்திட்ட என் தோழி இந்திராவிற்கு நன்றி.
எழுதினால் மட்டும் போதுமா...எழுதியதை படிப்பதற்கு யாராவது வேண்டாமா? நான் எழுதியதை யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று ஆரம்பத்தில் நினைத்தேன். படித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் செய்கின்ற உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி....
இன்று போல் என்றும் என் எழுத்தை நீங்கள் படிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.
வணக்கம்.
சிந்தனை செய்யாதே மனமே USA link
சிந்தனை செய்யாதே மனமே India link
கதைகள் பத்து USA link
கதைகள் பத்து India link
சுஜாதாவைப் பற்றி சுஜாதா USA link
சுஜாதாவைப் பற்றி சுஜாதா India link
No comments:
Post a Comment