(Excerpts from my published post)
உங்களுக்கு பேராசியர் திரு. ஞானசம்பந்தம் தெரியுமா? பிரபல பேச்சாளர். சினிமாவில் நடித்திருக்கிறார். அவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையக் காரணங்கள். அவரின் மதுரை தமிழ்..யார் மனதையும் புண்படுத்தாத ஹாஸ்யம்....எல்லாவற்றிற்கும் மேலாகத் திருப்பாவை மேல் அவர் கொண்ட ஈடுபாடு. நான் கேட்டவரையில் திருப்பாவைப் பாசுரங்களை எப்படியோ தன் உரைகளில் கொண்டு வந்துவிடுவார். religiousஆக அர்த்தம் கூறாமல், தமிழ் சார்ந்து அர்த்தங்கள் கூறுவார். அப்படி தான் நேற்று இரவும் கேட்டுக் கொண்டிருந்தேன். எப்போதும் போல் அவர் பேச்சில் திருப்பாவை வந்தது...திருப்பாவையைத் தொடர்ந்து சுஜாதா வந்தார்... நானும் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்டதுண்டு. நான் கேட்ட வரையில் சுஜாதா அவர்களைப் பற்றி யாரும் பேசியதில்லை. பேராசியர் திரு. ஞானசம்பந்தம் அவர்களின் பேச்சில் சுஜாதா....சுஜாதா அவர்களின் பிரபலமான வசனம் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்று பேராசியர் கூறிய போது மகிழ்ச்சியில் அதிர்ந்து போனேன்.
ரஜினியின் "சிவாஜி" திரைப்படம். எனக்குப் பிடித்த ரஜினி திரைப்படங்களில் ஒன்று. எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று நினைவில் இல்லை. சமீபத்தில் கூட குடும்பமாக பார்த்து மகிழ்ந்தோம். அந்தத் திரைப்படத்தில் எல்லாமே அருமை....சுஜாதா அவர்கள் கை வண்ணத்தில் வசனங்கள் மிக அருமை. அதிலும் "சும்மா அதிருதில்ல"
அருமை....அந்த வசனத்துக்குத் தியேட்டர் அதிர்ந்தது இன்றும் கூட நினைவில் இருக்கிறது. "சும்மா அதிருதில்ல..." என்று ரிங்டொன் வைத்துக் கொண்ட பலருள் நானும் ஒருத்தி. "சிவாஜி" திரைப்படமும் பல முறை பார்த்திருக்கிறேன்... திருப்பாவையும் பல முறைச் சேவித்து இருக்கிறேன்.....ஆனாலும் "அதிருதில்ல..." என்ற வார்த்தை திருப்பாவையிலிருந்து தான் வந்தது என்று எனக்குத் தோன்றவில்லை. பேராசியர் திரு. ஞானசம்பந்தம் அவர்கள் கூறிய பின் தான்...திரு. சுஜாதா அவர்கள் "ஆழி மழைக் கண்ணா" என்ற திருப்பாவை பாசுரத்தில் வரும் " ஆழிப் போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து" என்ற வரியில் inspire ஆகி "சும்மா அதிருதில்ல" வை உருவாக்கியிருக்கிறார் என்று தெரிந்தது. திருப்பாவை, சுஜாதா, ரஜினி இந்த மூன்றிற்கும் நான் அடிமை. இந்த மூன்றும் சேர்ந்தது தான் "சும்மா அதிருதில்ல...." என்று தெரிந்து போது மேனி சிலிர்த்து, தலை சுற்றியே வேதனை செய்து....வானில் இடத்தில் எல்லாம் சுஜாதா தெரிய....நான் மீண்டும் மீண்டும் அதிர்ந்தேன்.
No comments:
Post a Comment