- சங்கருக்கு hats off👏👏👏....ஹாலிவுட் படத்திற்கு நிகராக ஒரு தமிழ்ப் படம் 2.0....3D விஷுவல் எஃபேக்ட்ஸ் பிரமாண்டம்...எப்படி இப்படி....என்று பல இடங்களில் நான் வியந்து போனேன். பாகுபலி உலகத் தரமாக இருந்தாலும், அது தெலுங்கு மொழிப் படம். நம்மால் ஒட்ட முடியவில்லை...2.0 நம் மொழிப் பேசும் படம். இதே போல் ஒரு படம் இதுவரை நான் தமிழில் பார்த்ததில்லை. சத்தே இல்லாத தமிழ்ப் படங்களைப் பார்த்து சோர்ந்து போன நமக்கு 2.0 ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்
- சின்ன வயதில் "மை டியர் குட்டி சாத்தான்" என்ற 3D படத்தைப் பார்த்து வியந்தது நினைவில் இருக்கிறது. பிறகு கோச்சடையான்....அது அனிமேட்டட்....நிஜப் படம் இல்லை.....2.0 உண்மையில் 3D....அதுவும் Superstar என்று போடும் போது....3Dயில் S, U, P, E, R, S,T,A,R என்று ஒவ்வொரு எழுத்தாக 3D கண்ணாடி வழியாக நம் கண்ணிற்குள் போகும் போது, ஏதோ சூப்பர் ஸ்டாரே நம் உடம்பில் புகுந்து உணர்வில் கலப்பது போல் ஒரு பிரம்மை....😀
- 2.0 வின் கதாநாயகன் காட்சிகள்...காட்சிகள்....காட்சிகள்....அதனால் ரஜினி அவர்களுக்கு மிகப் பெரிய வேலை இல்லை என்றாலும்.....அந்தக் கால வில்லன் ரஜினி 2.0 ரோபோவில் தெரிகிறார். 3.0 ரோபோவாய் ஸ்டைலாய் சிரிக்க வைக்கிறார்.
- ஏமி ஜாக்ஸனை திரையில் முதலில் பார்க்கும் போது, "அட....இவங்களே ஒரு ரோபோ போல தானே இருக்காங்க..." என்று எண்ணம் தோன்றியது....ஏமி ஜாக்ஸன் கன கச்சிதம்....ஹீரோயின் என்று வந்து போகாமல், அவருக்கும் முக்கியத்துவம் அளித்து சங்கருக்கு ஒரு "ஓ".....ஏமியும் ஓவர் ஆக்ட் செய்யாமல் மிதமாய் நடித்திருக்கிறார்.....
- அக்ஷய் குமார் நடிப்பு பற்றியேல்லாம் பேசுவதற்கு எனக்கு தகுதியில்லை. அவர் நடிக்கிறாரா, இல்லை நிஜமா என்று தெரியாத அளவிற்குக் நம்மை உரைய செய்வார். இதிலும் அப்படி தான்...பக்ஷி ராஜன் என்ற தாத்தாவாய் வாழ்ந்திருக்கிறார்....
- வசனம் ஜெயமோகன்... ..ஆங்காங்கே பஞ்ச்...ஆங்காங்கே....சிரிப்பு ...அதுவும் 2.0 ரஜினியின் டயலாக் டெலிவரி....சும்மா நச்சென்று இருக்கிறது..."நித்யானந்தாவால்" தியேட்டர் முழுவதும் சிரிப்பால் அதிரிந்தது ...எனக்கு மிகவும் பிடித்த டையலாக்.... "Nice DP"😀
- எத்தனையோ கவிஞர்கள், புலவர்கள் பறவைகளைப் பற்றி பாடியிருக்க, நம்மாழ்வாரின் எட்டாம் திருமொழியில் வரும் "பொன்னுலகாளீரோ!புவனி முழுதாளீரோ!நன்னலப் புள்ளினங்காள்.." என்ற பாடல் எப்படி கிடைத்தது....எழுத்தாளர் சுஜாதாவின் "positive aura" உதவியிருக்குமா...😀
- பிண்ணனி இசை பிரமாதம்....மூன்றே பாடல்கள் தான்....மனதின் இன்னும் பதியவில்லை....படம் முடிந்து ஒரு பாடல் வருகிறது....படம் தான் முடிந்து விட்டதே என்று ஒருவர் கூட எழுந்து போகாமல் அந்தப் பாட்டைப் பார்த்தது....எட்டாம் உலக அதிசயம்...
- எல்லாவற்றையும் விட முக்கியமாக அச்சு பிச்சு சிரிப்பு இல்லை, குத்துப் பாட்டும் இல்லை...சூப்பர் ஸ்டாரைப் போல் கண்ணியமான படம்...😉
- இது மட்டும் ஆங்கிலப் படமாக் இருந்திருந்தால்.....3.0 என்ற குட்டி ரோபோ கிருஸ்மஸ்காக கடைகளில் வந்திருக்கும். யூனிவர்ஸல் கிங்டமில் 2.0 என்ற ride சிறிது நாட்களுக்கு பிறகு வரும்
- இந்தப் படத்தில் மெஸெஜ் இருக்கிறது...அதைக் கேட்டு நாம் திருந்துவோமா என்று தெரியவில்லை....
- இந்தப் படத்தின் மைனஸ் கதை....வில்லன் என்பவர் நல்லவர்...ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காக பாடுபடுகிறார்.....அந்த நல்லவரை வில்லனாக்கி.....கதையைக் குழப்பி இருக்கிறார்.
- படத்தின் பெயர் 2.0....2.0 மட்டுமே பிரதானமாக இருந்திருக்க வேண்டும்...அதை விடுத்து..சிட்டி, பக்ஷி ராஜன், 3.0 என்று எக்கச்சக்கமான கதாபாத்திரங்களைப் புகுத்தி....2.0வை dilute செய்துவிட்டார்
- வசனங்களில் இன்னும் கொஞ்சம் சிரிப்பொலி இருந்திருக்கலாம்....கடைசியாய் ரஜினி "மீ டூ"என்கிறார். அந்த இடத்தில் சிட்டி "மீ டூ " சம்பந்தமாக ஏதேனும் சொல்லி சிரிக்க வைத்திருக்கலாம்.....மீ டூ இப்பொழுது தானே வந்தது என்று கேட்பவர்களுக்கு.....நித்யானந்தாவும் இப்பொழுது தானே ஸயின்ஸ் லெக்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்....
- குறைகள் இருந்தாலும்.....நடுவில் bore அடித்தாலும்....2.0 கட்டயமாக தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம்..... தியேட்டரில் பார்த்தால் தான் இதன் பிரமாண்டம் புரியும்....ரஜினியைப் பிடிக்காதவர்கள் பேச்சைக் கேட்காதீர்கள்....இது போல் ஒரு தமிழ்ப் படத்ததை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்....ஆதலினால் கட்டாயமாக தியேட்டரில் சென்று பாருங்கள்......
It's been seven years since I started blogging something interesting, something silly, something funny, and so many somethings. Thanks so much for reading my posts. While we continue this journey together, let us not forget our responsibilities. Writing is my responsibility. Reading, liking, commenting, sharing, is your responsibility. Let’s adhere to our responsibilities and make the world a better place to live!!
2.0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment