அப்பப்பா..........

ஒண்றும்  இல்லை, ஒண்றுமே இல்லை.   இரண்டு  நாள் "அவர்" ஊரில் இல்லை.  அந்த இரண்டு நாட்களை  எப்படியெல்லாம் uselessஆ கழிக்கலாம் என்று  தீவிரமா யோசிச்து  திட்டம்  தீட்டி வைத்தால், என்னுடைய அந்த super useless திட்டத்தில் வந்து விழுந்தது Stomach Flu .  இரண்டு  நாளும் என் பொன்னான நேரம் வயத்த வலியில் super uselessஆகக் கழிந்தது. என்ன கொடுமை Sir, இது?

இரண்டு நாளைக்குப் பிறகு இரவு பத்து மணிக்கு வந்து கதவைத் தட்டி கேட்டார் அவர்,

"என்னாச்சு?"

"கிரிக்கெட் விளையாண்டோம்.  நீதானே அடிச்ச.  பால் மேல போச்சு.......sorry. sorry. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். stomach flu."

"நாளைக்கு சரியாயிடும்.  இல்லாட்டா டாக்டர் கிட்ட போகலாம். rest எடுத்துக்கோ"

"அவ்வளவு தானா?"

"வேற என்ன வேணும்?"

"ஆங்...ரெண்டு இட்லி, ஒரு தோசை....."

  நான் எதிர்பார்த்த,என்னவென்று தெரியாத அந்த ஏதோ ஒன்று கிடைக்கும் ஒரே இடம்  சென்னையில் ராயப்பேட்டைக்கும், மயிலாப்பூருக்கும் மிக அருகில் இருக்கும் என் அன்னை இல்லம்.

க்ரீங் க்ரீங் சென்னைல எங்க வீட்டுல phone அடிக்க

"ஹலோ," எங்கப்பா

"அப்பா, நான் தான் பா,"

"என்னடி, இந்த timeக்கு phone பண்ற, மணி என்ன அங்க?"

"மணி ராத்திரி பத்துப்பா.   ஒரே வயத்த வலிப்பா."

"சூடா இருக்கும்.  ----------- பண்ணிப் பாரு,"

"சரிப்பா,"

" சரியாகாட்டா, ---------- சாப்ட்டு பாரு,"

"சரிப்பா,"

(இதே ரீதியல எங்கப்பா/எங்கம்மா  எக்கச்சக்க வீட்டு வைத்தியம் சொல்ல, நானும் எல்லாத்துக்கும் "சரிப்பா சரிப்பா" அப்டினு சொல்ல)

"என்ன சாட்ட?"

"ஒண்ணும் சாப்டலப்பா."

"வெறும் வயத்தோட இருக்காத.  மோர் சாதமாது சாப்டு."

"சாப்ட்னுனே தோணலப்பா"

"கொஞ்சம் வெறும் மோராது சாட்டு படுத்துக்கோடி.  காலி வயத்தோட படுத்துக்காத."

"சரிப்பா.  சாப்படரேன்."

"நாளைக்கு கார்த்தால எழுந்து phone பண்ணு. "

"சரிப்பா. நாளைக்கு பேசறேன்.  வைச்சுடட்டுமா?"

"வைச்சுடு.  அவர கேட்டதா சொல்லு.  நாளைக்கு phone பண்ணு"

"சரிப்பா.  வைக்கறேன்."

"வைச்சுடு,  எதாவது சாப்ட்டு படுத்துக்கோ."

"சரிப்பா."

"நாளைக்கு  phone  பண்ணு"

"சரிப்பா."

இன்னும் பல "சரிப்பா"களுக்கு பிறகு phone ஒரு வழியாக கீழே வைக்கப்பட்டது.


நான் எதிர்பார்த்த அந்த ஏதோ ஒன்று கிடைத்தது.   என்ன தான் என் அவர் என்னைக் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டாலும்,  என்னைப் போன்ற சில பிறவிகளுக்கு, சில சமயங்களில், அப்பாவின் அக்கறை தேவையாகத் தான் இருக்கிறது.  அதற்காக அம்மாவின் அன்போ/அக்கறையோ தேவையில்லை என்ற அர்த்தம் இல்லை.  அப்பாவிற்கு அதிகமாக அம்மா அக்கறையுடன் இருந்தாலும் "Opppsite poles attract," என்ற விதிப்படி அப்பாவை நோக்கியே மனம் செல்கிறது.

தொலைப்பேசியை வைத்து விட்டு என் அப்பாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சொல்லிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.   கவி காளிதாசர் வாழ்ந்த காலத்தில், எல்லா நாட்டு அரசவை கவிஞர்கள்  ஒண்று கூடி தேசத்துலேயே மிக உயர்ந்த கவிஞர்களை கணக்கேடுப்போம் என்று  கை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தார்களாம்.  அவ்வாறு கை விட்டு எண்ண ஆரம்பிக்கும் போது, முதலில் வருவது சுண்டு விரல்.  ஆதலால் சுண்டு விரலிற்குக் கவி காளிதாசர் என்றார்களாம். அடுத்து வருவது மோதிர விரல்.  கவி காளிதாசருக்கு இணையாக அவர்களால் வேறு கவிஞர்களைக்  கூற முடியவில்லை.   ஆதலால்  மோதிர விரலுக்கு ஆளும் இல்லை,  பெயரும் இல்லை.  பெயர் இல்லாத  மோதிர விரலுக்கு  "அனாமிக்கா"(பெயர் இல்லாதது) என்று அன்று தான் பெயர் வந்தது .

அதே போல் இந்த உலகத்தில் யாரெல்லாம் நல்ல அப்பா என்று  நான் கை விட்டு எண்ணும் போது, சுண்டு விரலுக்கு எங்க அப்பா, மோதிர விரலுக்கு......(எங்கப்பாவிற்ககு ஈடு இணையாக) ஒருவரும் இல்லை. இதை என் குடும்பத்துக்கு ஒலிபரப்ப வேண்டுமே!!

"மக்களே,  ஒரு விஷயம் சொல்லணும்," என்று நான் சொல்ல,

"Tell me, tell me," என் மகள் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடிக்க,

"Whatever," என்று என் பையன் ஒரு பார்வை பார்க்க,

"என்ன குண்ட தூக்கிப் போடப் போறாளோ" மிரட்சியுடன் அவர் பார்க்க,

மெல்ல தொண்டையைச் சரி செய்து கொண்டு,

"இந்த உலகத்துலேயே எங்கப்பா தான் best," என்று நான் சொல்ல,

"My Appa too," என்று என் பெண் என்னை விடுத்து அவரைச் சென்றுக் கட்டிக்கொள்ள,

"ஆமாம்மா.  எங்கப்பா தான் best," என்று என் வார்த்தைகளையே எனக்குத் திருப்பித் தர

"ஆமாம் சுஜா.  உலகத்துலேயே எங்கப்பா தான் best," என்று அவர் பெருமையுடன் கூற,

அப்பப்பா..........

என்னைப் போலவே நீங்களும் விரல் விட்டு எண்ணுகையில் உங்கள் மோதிர விரலுக்கும் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.












1 comment:

  1. True,,, A daughter is always a Father's princess !!.. am proud to say "My father is THE BEST " :-)

    ReplyDelete