தப்பு தான். தெரியாம கேட்டுட்டேன். நான் ஒண்ணும் அடுத்தாத்து அம்புஜத்த பாத்து
என் கணவர் கிட்ட ஒண்ணும் கேக்கலை. எல்லாம் அந்த கிருஷ்ணர் கிட்ட தான் . என்ன கேட்டேனா
ஒரு அனுபவம் கேட்டேன். எல்லாரும் "அதை" பத்தி சொல்லறப்போ "ச்சே ,
நமக்கு அந்த அனுபவம் இல்லையே"னு ரொம்ப feel பண்ணேன். அதுவும் Madras போனா எல்லாரும் ஒரு தடவையாவது "அதை" பத்தி பேசாம இருக்கமாட்டா.
என்னடா இது, நமக்கு அந்த அனுபவம் இல்லாமலே போயிடுமோனு ஒரே tension. அதனால நேர்
முறையீடு கடவுள் கிட்ட. ஒரு தடவையாவது அந்த அனுபவத்தை தரக் கூடாதான்னு சும்மா
ஒரு பேச்சுக்கு கேட்டேன்.
கிருஷ்ணர்
பாத்தார் "இதுக்கு தானே ஆசை பட்ட Suja" இந்தா அப்படின்னு நல்லா பலமாவே குடுத்துட்டார். என்னது??Earthquake தான்.
. என்னவோ "5.8", "5.9" ங்கறாங்க. நமக்கு என்ன தெரியும். எதோ நான் பாட்டுக்கு எப்பவும் போல
kitchenல என் dreamlandல இருந்தேன். தடால்னு wallல எதோ விழுந்தா மாதிரி இருந்த்துது. "டேய், வீட்டுக்குள்ள Ball விளையாடதேனு
எத்தனை……" அப்படினு என் பையனை திட்டிண்டு இருக்கும்போது என்னை சுத்தி பெரிய சத்தம். கோவம் சுர்னு தலைக்கு
ஏறிடுத்து. " மாடில இருக்கறவன் சமத்தியா இப்ப ஏங்கிட்ட திட்டு…" அப்படின்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுப்பு மேல இருந்தா
பாத்திரம்லாம் ஒரு ஆட்டம் ஆடித்து. அப்ப தான் தெரிஞ்சுது,அடடா.. இது Earthquake அப்படின்னு realize பண்றதுக்குள்ள
எல்லாம் ஆடி அடங்கிடுத்து. ரொம்ப பிரமாதமான quake. அக்கம் பக்கம் மக்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளில வந்துட்டாங்க. நாங்க
வீடுக்குள்ளேந்து வெளில இருக்கறவங்களை பாத்து கலாட்டா பண்ணிண்டு இருந்தோம். ஆனா, இந்த earthquake அனுபவம்
என் வாழ்நாளுக்கு போரும். இதான் earthquake னு தெரிஞ்சுபோச்சு. இனிமே வந்தா வீட்டை விட்டு எல்லாரையும் கூட்டிண்டு , எல்லாத்தையும் எடுத்துண்டு ஒடணும். ரொம்ப கஷ்டம். அதனால, தெய்வமே!! எதோ சின்ன பொண்ணு தெரியாம கேட்டுட்டேன், நீயாவது யோசிச்சு பண்ணகூடாதோ?lesson learnt. இனிமே அடுத்தாத்து அம்புஜம் என்ன வச்சுண்டு இருக்காளோ அது மட்டும் தான் என் wish listல இருக்கும்.
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு
எட்டு கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு !!!!!!!
கலிஃபோர்னிய மக்கள் சார்பா உங்க நிலநடுக்க அனுபவத்துக்கு ஒரு "கெட்-வெல்" கார்டு அனுப்பியிருக்கேன். இந்த இணையதளத்துல போய் பாத்துக்குங்க...
ReplyDeletehttp://i.imgur.com/7kDXs.jpg