My definition of Motherhood


தாய்மை எனப்படுவது யாதெனில், யாவற்றையும்
அறிய வைக்கும் ஆசான்.


- பகலில் மட்டுமே விழித்திருந்த என்னை முதன் முதலில்
"Nocturnal" ஆக்கியது தாய்மை.

- "Intuition" என்ற புது உணர்வை எனக்கு கொடுத்தது தாய்மை.

- புளியோதரையை விட பருப்பும் நெய்யும் கலந்த ரசம் சாதம்
தேவாமிர்தம் என்று என்னை உணர வைத்தது தாய்மை.

- 10/7 ஆக இருந்த என்னை 24/7 ஆக மாற்றியது தாய்மை.

- பார்த்தனாக இருந்த என்னை car ஓட்ட செய்து "சாரதி" ஆக
மாற்றியது தாய்மை.

- Grocery list & Shopping list மே எழுதி வந்த என்னை "கதை"
எழுத வைத்தது தாய்மை.

- து. பருப்புக்கும், உ.பருப்புக்கும் வித்தியாசம்
தெரியாதிருந்த என்னை"Creative Cook" ஆக மாற்றியது தாய்மை.

- மனதை கெடுக்கும் "கோலங்கள்", "அரசி" என்ற வலையில்
விழாமல், "Scooby-Doo", "Dora" என்று என்னை திசை மாற்றியது தாய்மை.

- எல்லாவற்றுக்கும் மேலாக என் அருமை "தாயின்" அருமையை
எடுத்து காட்டிய பெரிய பூத கண்ணாடி தாய்மை.

அந்த அருமை தாயால் நான் கண்டது
உலகின் மிகச் சிறந்த என் தந்தையை.
அந்த சிறந்த தாய் தந்தையால் நான் பெற்றது
ஈடு இணையற்ற என் In-Laws.
அந்த உயர்ந்த In-Laws ஆல் நான் அடைந்தது
மிகவும் அருமையான என் கணவரை.
அந்த கணவரால் நான் கண்டது
ஒப்புமை இல்லா இரண்டு கண்மணிகள்.
அந்த சின்னஞ்சிறு கண்மணிகளால் நான்
அடைந்த மிக பெரிய பதவி "தாய்".
அந்த தாய் என்ற பதவியால் நான்
கண்டது தான் "தாய்மை".
இன்று நான் கைமண் அளவு கற்றது
"தாய்மையினால்". ஏனனில்
தாய்மை எனப்படுவது யாதெனில்............................